அத்தியாயம்-3
“உன் பிரண்ட் கிட்ட பேசுனியா?” ரோஹித் கண்ணாடிக் குவளையில் பழச்சாறை ஊற்றியபடி வினவ, தலைமுடியை கொண்டை போட்டபடி கணவனின் அருகே வந்த ரூபா, “யாரை கேக்கறீங்க?” என்று கேட்டாள்.
மனைவியின் கரத்தில் பழச்சாறை கொடுத்தவன், “அதுதான் முட்டி போட்டு உக்காந்தா கூட உன்னோட ஹைட்ல இருக்குமே ஒண்ணு.. அது”...