மறையாதே என் கனவே-18,19,20,21,22

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-18

அடுத்தநாள் காலை வழக்கம் போல விடிந்தது. எப்போதும் போல காலை ஐந்தரை மணிக்கே எழுந்த கௌசி என்ன செய்வது என்று தெரியாமல் மாடிக்கு போய் நின்றாள். அருகருகே வீடுகளும் அவ்வளாக இல்லை. தள்ளித் தள்ளியே இருந்தது. யாரும் இல்லை என்பதை அறிந்தவள் தன் யோகா பயிற்சியை ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் செய்தவள் பயிற்சியை முடித்துக்கொண்டு அருகில் இருந்த இடங்களை ரசிக்கத் துவங்கினாள். சும்மாவே சில்லென்ற கோயம்பத்தூர் தான். அதுவும் கிணத்துக்கடவு சொல்லவே தேவை இல்லை. சிட்டிக்கு வெளியே தோட்டங்களுடன் அழகாகக் காட்சியளித்தது.

யோகாவை முடித்துக் கொண்டு 6.10க்கு கீழே வர சுமதியும் சரியாக தூக்கத்தில் இருந்து விழித்தார். "என்ன கௌசி, சீக்கரமே எந்திரிச்சிட்டயா?" என்று கேட்டார்.

"ஆமா அத்தை... ஐந்து மணிக்கே எந்திருச்சுருவேன். யோகா பண்ணிட்டு வந்தேன் மேலே"

"சரி, நான் போய் காஃபி போடறேன் கௌசி... நீ டீயா இல்லை காஃபியா?" என்று முந்தானையைச் சொறுகியபடியே வினவினார்.

"இல்லை அத்தை... நீங்க இருங்க நானே போய் போடறேன்" என்றவள் அவரிடம் டீயா காஃபியா என்று கேட்டுவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தாள்.

தனக்கும் தன் அத்தைக்கும் காஃபியைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் அவரிடம் ஒரு கப்பை தந்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு உட்கார, விக்னேஷ் ஜாக்கிங்கை முடித்துக் கொண்டு வந்தான்.

உள்ளே வரவர, "அம்மா காஃபிமா" என்று வந்து உட்கார, கௌசி மறுபடியும் சென்று அவனுக்கு ஒரு காஃபி கப்பை எடுத்து வந்தாள்.

காஃபியைக் குடித்தவள், "அத்தை நான்... அப்பா கூட போய் இருக்கேன் இன்னிக்கு" என்று சொன்னாள் சுமதியிடம்.

"தாராளமாகப் போ... விக்னேஷ், கௌசியை போற வழியில இறக்கிவிட்டுட்டு நீ போ" சுமதி சொல்ல, சரி என்பது போல தலையை ஆட்டியவன், "சீக்கிரம் ரெடி ஆயிடு" என்று கௌசியிடம் சொல்லிவிட்டு போனான்.

இருவரும் கிளம்பி காரில் ஏறி ஜீவாவின் வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். "சித்தாதா..." என்று வழக்கம்போல அவன் காலை வந்து கட்டிக் கொண்டாள் வியாஹா. பின் கௌசியைப் பார்த்தவள், "ஹை! சித்தியும் வந்திருக்காங்க" என்று குஷியானாள்.

வியாவின் குரல் கேட்டு வந்த மதியும் ஜீவாவும் இருவரையும் சாப்பிட அழைக்க, "இல்ல ஜீவா, நாங்க சாப்பிட்டு விட்டு தான் வர்றோம்... இந்தா கார் சாவி, நான் அப்படியே கௌசியை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு ஸ்டுடியோ போகணும்" என்றான்.

"நான் கௌசியை ஹாஸ்பிடல்ல விடறேன்... அதான், என் ஸ்கூட்டி இருக்குல்ல... நீங்க கிளம்புங்க விக்னேஷ்" என்று மதி சொன்னாள்.

ஒரு நிமிடம் யோசித்தவன், "சரி, நான் மாமாவை ஈவ்னிங் பார்க்க வருவேன். அப்போ பிக்அப் பண்ணிக்கறேன் கௌசி" என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு வியாவையும் கொஞ்சி விட்டுக் கிளம்பினான் விக்னேஷ்.

அவன் கிளம்பிய பின் ஜீவாவும் அனைவரிடமும் சொல்லிவிட்டு விடை பெற்றான். "நீங்க தான், சித்தாவை பாத்துக்க போறீங்களா?" என்று கௌசியிடம் அவள் கையைத் தன் கைகளால் பிடித்தபடிக் கேட்டாள்.

அந்த பிஞ்சுக் கைகள் தந்த மென்மையை ரசித்தவள், "ஆமாம்" என்றாள் கௌசிகா. ஏனோ, 'ஆமாம்' என்று நேற்று விக்னேஷிடமும் மதியிடமும் சொல்லாதவள் இந்தப் பிஞ்சிடம் சொன்னாள். கௌசிக்கே ஆச்சரியம், 'தான் எப்படி ஆமாம் என்று சொன்னோம்? எப்படி? எப்படி?' என்று யோசித்தாள். விடைதான் அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால், தன் உள்மனதில் இருந்த காதலால் தன்னையும் மீறி சொன்னதை அவள் உணரவில்லை. அவள் உணர முடியாவண்ணம் அவளை சில கெட்ட நிகழ்வுகள் ஆட்கொண்டு இருந்தது.

"ஐ... நீங்க தான்... சித்தி..." என்று அவளின் மடியில் ஏறி உட்கார்ந்த வியாஹா கௌசியின் கன்னத்தில் முத்தத்தைத் தர, கௌசி தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.

கௌசி வியாஹாவைப் பார்க்க, "சித்தி, நீங்க அழகாகா இக்கீங்க" என்றது.

"ஏன்டி... அப்போ அம்மா" என்று வேண்டுமென்றே வியாஹாவை வம்பிற்கு இழுக்க, குட்டிப் பாப்பாவோ, 'க்ளுக்' எனச் சிரித்தது.

"நீ இல்ல போ... நீ இன்னிக்கு காலைல எனக்கு கிஸ்ஸி குடுக்கவே இல்லை... அப்பாக்கு தான் கிஸ்ஸி தந்த... நான் பாத்தேன்" வியாஹா. வியாஹா தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்து மதி கணவனுக்குத் தந்த முத்தத்தை வாண்டு பார்த்துவிட்டது போல. அதை இப்போது சொல்ல கௌசியும் சிரித்து விட்டாள். இதே பழையக் கௌசியாக இருந்திருந்தால் மதியைக் கலாய்த்தே தள்ளி இருப்பாள். ஏனோ இப்போது வாய் எழவில்லை கௌசிக்கு.

"ஆமா, சித்தி, காலைல அம்மா..." என்று கௌசியிடம் ஆரம்பிக்க எழுந்து மகளிடம் வந்த மதி, மகளின் வாயை அடைத்தாள்.

"பாப்பா, அம்மா மானத்தை வாங்கறே நீ" என்று மிரட்ட கௌசியின் மடியில் இருந்து இறங்கிய வியா, தன் அன்னையை நோக்கி கோபமாகக் கையைக் கட்டி நின்றாள். "இப்போ என்ன உனக்கு கிஸ்ஸி வேணுமா?" என்று மதி குனிய, வியாஹா சிலுப்பிக் கொண்டாள்.

"ஹும்... நீங்க ஒன்னும் தர வேண்டாம்... நான் என் சித்திகிட்ட வாங்கிக்கறேன்" என்று கௌசியிடம் சென்று கன்னத்தைக் காட்டினாள் ஏற்கனவே அவள் செய்கையை ரசித்துக் கொண்டு இருந்த கௌசிகா உரிமையாய் என் சித்தி என்று சொல்லி கன்னத்தைக் காட்டவும் அதில் நெகிழ்ந்தவளாய், வியாஹாவை தூக்கி வைத்து கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சி விட்டாள்.

பிறகு மூவரும் கிளம்பி ஹாஸ்பிடல் செல்ல ஸ்கூட்டியை ஓட்டிய மதி வியாஹாவிடம் அட்வைஸ் பண்ணிக்கொண்டே வந்தாள், "பாரு பாப்பு... அங்க வந்து சத்தம் போடக்கூடாது. வரது தாத்தாவ பாத்தா நல்லா இருக்கீங்களா கேக்கணும்" என்று பேச வியாஹா, "ம்ம்", "ம்ம்" என்றே வந்தாள்.

மறுபடியும் மதி ஏதோ ஆரம்பிக்க, "அய்யோ அம்மா... எவ்வளவு தடவ சொல்லுவீங்க?" என்று சிணுங்கினாள். பின்னால் உட்கார்ந்து கொண்டு இதை எல்லாம் கவனித்தபடி வந்த கௌசி சிரித்துவிட்டாள்.

பின் ஹாஸ்பிடலை அடைய வியாஹா கௌசியிடம் வந்து, "சித்தி தூக்குங்க" என்று கையைத் தூக்கிக் காட்ட கௌசியும் அவளை ஆசையாக எடுத்துக் கொண்டாள். ஏனோ கௌசியை வியாஹாவிற்கு பிடித்து விட்டது. அதனால் அவளுடனே இருக்க ஆவலாக இருந்தாள்.

தந்தையைப் பார்த்து விட்டு சிறிதுநேரம் நின்றவள், "அத்தை நீங்க வேணும்னா போயிட்டு ஈவ்னிங் வாங்க. நான் அது வரைக்கும் அப்பாவைப் பாத்துக்கறேன்" என்று சொல்ல ஜெயாவும், 'நேற்று அப்பாவும் மகளும் அவ்வளவாகப் பேசவில்லை... இன்றாவது பேசட்டும்' என்று எண்ணித் தலையை ஆட்டினார்.

"வரது தாத்தா... நல்லா இருக்கீங்களா?" என்று தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்ந்தகுரலில் கேட்டாள் வியாஹா. அவளிற்கு பதில் அளித்தவர், "பாப்பா... இது யாருன்னு தெரியுமா?" என்று கௌசியைக் காட்டிக் கேட்டார்.

"ஓஓ தெரியுமே... இது சித்தி, சித்தாவை கல்யாணம் பண்ணப்போறாங்க" என்று கருமணிகளை விரித்துச் சொல்ல வரதராஜன் புன்னகைத்தார்.

"சித்தியோட அப்பா யாருன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

தன் ஆள்காட்டி விரலை தாடையில் வைத்து யோசித்த வியாஹா, "சித்தி உங்க அப்பா பேரு என்ன?" என்று கேட்டாள்.

"இதோ உன் தாத்தா தான் சித்தியோட அப்பா" என்று வியாஹாவிற்கு வலிக்காத வண்ணம் மூக்கைப் பிடித்து நிமிண்டினாள் கௌசி.

"அப்போ சித்தா கூட இருக்க சித்தி தான் உங்கப்பொண்ணா தாத்தா" என்று அறியா சிறுமியாய் கேட்டாள்.

சிரித்த வரதராஜன், "ஆமாம் பாப்பா" என்றார் வியாஹாவின் தலையை வருடியபடி. விட்டால் தன்மகள் கேள்விகேட்டே எல்லோரையும் ஒரு வழி பண்ணி விடுவாள் என்று நினைத்த மதி, வியாஹாவைத் தன்பக்கம் இழுத்தாள். பின் மதி, வியாஹா, ஜெயா என அனைவரும் கிளம்பினர்.

தன் தந்தையிடம் உட்கார்ந்தவள் பேச்சை ஆரம்பித்தாள்.

கௌசி, "அப்பா..."

"உன்ன அப்பா ரொம்ப கஷ்டப்படுத்தறேனாமா" வரதராஜன் வாடியக் குரலில்.

கௌசி, "அதெல்லாம் ஒன்றும் இல்லைபா... நீங்க அப்படி நினைக்கவே நினைக்காதீங்க"

"விக்னேஷ் உன்ன நல்லாப் பாத்துப்பான்மா... நீ கவலையேபடாதே எல்லாம் சரி ஆகிவிடும்" என்று சொல்லத் தலையை மட்டும் ஆட்டினாள்.

"நீ ஏதோ சொல்ல வந்தியேமா?" என்று ஞாபகம் வந்தவராய்க் கேட்டார் வரதராஜன்.

"இல்லப்பா... அது வந்து நான் வேலைக்குப் போகட்டா?" என்றுக் கேட்டாள்.

வரதராஜன், "இப்போ அதுக்கு என்னமா அவசியம்? கொஞ்சநாள் போகட்டும்"

"இப்படியே இருந்தா எனக்கு பழகிடும்பா... அதான், இப்போதே வேண்டாம் ப்பா... ஒரு மாசம் அப்பறம் தான் கேட்கிறேன்" என்று தன் தந்தையை இந்த நேரத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினாள்.

வரதராஜன், "சரிடா, சாய்ந்திரம் விக்னேஷ் வரட்டும்... சொல்றேன்"

கௌசி, "ம்ம்"

மாலை விக்னேஷ் வந்த பின், வரதராஜன் கௌசியின் விருப்பத்தைச் சொல்ல, "சரி மாமா... ஆனால், நம்ம ஸ்டூடியோக்கே வரச் சொல்லுங்க... ஏற்கனவே நான் இன்சார்ஜ்க்கு ஒரு பொண்ண தேடிட்டு இருந்ததுதான்" என்றான்.

சிறிது நேரத்தில் சுமதி வர, "அம்மா நீங்க எங்க இங்க? எப்படி வந்தீங்க?" என்று வினவினான்.

"டேய், நான்தான் காலையிலேயே சொன்னேன்ல மறந்துட்டியா? நாளை சந்தியாக்கு வளைகாப்பு. ஜெயா பெரியம்மா எல்லாம் அந்த வேலையில பிசியா இருக்காங்க" என்றவர், "அதான் இன்னிக்கு நைட் நான் இங்க தங்கிக்கலாம்னு வந்தேன்" என்று சொன்னார்.

கௌசி, "நான் இருக்கேனே அத்தை... நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

"நீ நேற்றும் புது இடம்னால தூங்கலே... நான் நைட் டிபன் எல்லாம் செஞ்சு வச்சிட்டு வந்துட்டேன். நீ போய் சாப்பிட்டு விட்டு நல்லா ரெஸ்ட் எடு" என்று கௌசியை மேலே பேச விடாமல் செய்தார்.

"சரி நாங்க கிளம்பறோம்" என்று விக்னேஷ் சொல்ல கௌசியும் எழுந்தாள்.
விக்னேஷும் கௌசிகாவும் வெளியில் வந்து புறப்பட்டனர். வீடு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. வீடு வந்தவுடன் இருவரும் இறங்க விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். அதற்குள் ப்ரௌனி வந்து கௌசியின் காலைச் சுற்றி செல்லம் கொஞ்ச, 'நன்றி கெட்டது... இத்தனை நாள் வளர்த்த என்னைய கண்டுக்கறானா பாரு... நாயி நாயி' என்று மனதிற்குள் திட்டினான்.

இருவரும் உள்ளே நுழைய, "கௌசி உன்கிட்ட ஒன்னு பேசணும்" என்று விக்னேஷ் சொல்ல கௌசி என்ன என்பது போலத் திரும்பினாள்.

"இங்க பாரு கௌசி, உனக்கு ஏதாச்சும் வேணும்னா என்கிட்ட கேளு... அதை விட்டுட்டு காலைல அம்மாகிட்ட சொன்ன பாத்தியா, அப்பாவ பாக்கணும்... அப்புறம் அம்மா என்கிட்ட சொல்றாங்க கூட்டிட்டு போன்னு... அப்புறம் வேலை விஷயமாக மாமாகிட்ட பேசுனது எல்லாம் நீ என்கிட்டயே கேளு, சரியா?" என்று சற்று அதட்டினாற் போலப் பேசினான்.

அவன் அப்படி பேச கௌசியின் முகம் கூம்பியது. அவள் அவனிடம் வேண்டுமென்றே சொல்லாமல் இருக்கவில்லை. ஏனோ அவன் கம்பத்தில் தன்னை காயப்படுத்திய வார்த்தைகள் மற்றும் ஜீவா வீட்டில் நடந்தது என அனைத்திற்கும் பிறகு அவளால் அவனிடம் பேச முடியவில்லை.

பயம் என்று இல்லை. அவனிடம் தேவை இல்லாமல் வாயைக் கொடுத்து தானே வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என்று எண்ணினாள். ஆனால், அதற்கும் அவன் இப்படித் திட்டுவான் என்று அவள் நினைக்கவில்லை.

விக்னேஷிற்கு அவள் தன்னிடம் முதல் மாதிரி உரிமையாக இல்லாதது இப்படி பேசச் செய்தது. அவனுமே அவளிற்கு கொஞ்சம் டைம் குடுக்க வேண்டும் என்றே எண்ணினான். ஆனால், அவன் மனதில் இருந்த ஏக்கம் அவளிடம் அப்படி பேச வைத்தது.

"ம்ம்" என்றுவிட்டு உடையை மாற்றச் செல்ல விக்னேஷும் உடையை மாற்றிவிட்டு வந்தான்.

சாப்பிடும் போது பரிமாற வந்தவளை, "நீயும் உட்கார்... நாம இரண்டு பேர் தானே, நம்ம எடுத்துப் போட்டு சாப்பிடுவோம்" என்று அவளையும் எதிரில் உட்காரச் சொல்ல இருவரும் சாப்பிட்டனர்.

இடையில் விக்னேஷின் போன் அடிக்க எழுந்து சென்று எடுத்தவன், "சொல்லு ஜீ" என்றான்.

"வந்திடறேன் ஜீ" என்றவன், "இந்தா ஜீ பேசணுமாம்" என்று கௌசியிடம் ஃபோனைத் தந்தான்.

போனை வாங்கியவள், "சொல்லு ஜீ" என்றாள் டிபனை விழுங்கியபடியே.

"நாளை சந்தியாக்கு வளைகாப்பு கௌசி... காலைல வந்திரு" ஜீவா சொல்ல, கௌசி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"கௌசி, லைன்ல இருக்கியா? ஹலோ" என்று ஜீவா அழைக்க கௌசி யோசனையில் இருந்து வெளியே வந்தாள்.

"இல்ல ஜீ, நான் வரல... ப்ளீஸ்" என்று கௌசி உள்வாங்கிய குரலில் சொல்ல,
"நீ அவ சொன்னதை மறக்கலையா கௌசி?" என்று வருத்தமானக் குரலில் கேட்டான்.

"..." பதிலில்லை கௌசியிடம். எப்படி மறப்பாள் அவள். பரமேஸ்வரி கூட அடுத்த வீட்டுப் பெண்மணி. ஆனால் சந்தியா? கூடவே சகோதரியாய் வளர்ந்தவள் பேசியதை கௌசியால் மறக்கவே முடியாத ஒன்று.

"சரி கௌசி... பரவாயில்லை விடு" என்றான் ஜீவா அவளை நோகடிக்காத குரலில்.

"ம்ம்" என்றவள், ஃபோனை விக்னேஷிடம் தந்து விட்டாள்.

ஃபோனை வாங்கியவன் ஜீவாவிடம் சொல்லிவிட்டு வைத்துவிட்டு, மறுபடியும் வந்து உட்கார கௌசி தட்டையே அளந்து கொண்டு இருப்பதைக் கவனித்தான்.
"நீயே வரன்னு சொல்லி இருந்தாலும் நான் வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பேன் கௌசி... அவ பேசிய வார்த்தைகளுக்காக அல்ல... நீ அடுத்து அவ முன்னாடி நின்னா தாலியோடதான் நிக்கணும்னு... எதையும் யோசிக்காம சாப்பிடு" என்று சொன்னவன் அவள் உண்ணத் துவங்கியதும் தானும் உண்டான்.
பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

ஷோபாவில் உட்கார்ந்து ஃபுட்பால் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ், "க்கும்" என்ற கௌசியின் செருமலில் திரும்பினான்.

அவன் திரும்ப, "உன் ரூம் எது?" என்று கேட்டாள் கௌசி.

"என் ரூம் அதுதான்" என்றவன், "ஏன் கேட்கிறே?" என வினவினான்.

"எனக்கு தனியா இருந்தா நிறைய கனவு வரும், பேசாம..." என்றுத் தயங்கியவள், "பேசாமல் நீ ஷோபால படுத்துக்கோ... நான் இங்க ஹால்லயே கீழே படுத்துக்கறேன்" என்றாள்.

"சரி" என்றவன் உள்ளே சென்று ஒருபாயை எடுத்து வந்தான். மறுபடியும் சென்று ஒருபெட்டை எடுத்து வந்தவன், "பெட்ல படுத்துக்கோ கௌசி... தரைல சில்னெஸ் இருக்கும். அப்புறம் சளி புடிச்சிக்கும்" என்று சொல்லத் தலையை ஆட்டினாள்.

தேவையான தலையணை போர்வை எடுத்து வர விக்னேஷ் ஹாலின் ஷோபாவிலும், கௌசி ஹாலின் தரையிலும் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிப் படுத்திருந்தனர். அவன் அருகில் இருக்க தாயின் கருவறையில் இருப்பதைப் போல ஏதோ சிறுதைரியம் மற்றும் தெம்பு வர கௌசி கண்களை மூடினாள்.

ஆனால், விக்னேஷிற்குத் தான் தூக்கம் வரவில்லை. தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்க்க அவளின் முதுகுதான் அவளிற்குத் தெரிந்தது. அவளிடம் பழைய மாதிரி இருக்க மனம் ஏங்கித் தவித்தது. பழைய குறும்புத்தனமானக் கௌசியைக் காண விக்னேஷின் மனம் அலைந்தது.

அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற, "கௌசி" என்று அழைத்துப் பார்த்தான். பதிலில்லாமல் போகவே, 'அவள் தூங்கிவிட்டாள் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்' என்று விட்டுவிட்டான். அவளை சீக்கிரமே பழையக் கௌசியாய் மாற்ற கங்கணம் கட்டினான்.

ஆனால், நாளையே அவள் வேதனைப்படப் போவதை அவன் அறியவில்லை.
 
  • Like
  • Love
Reactions: Malar and Sowmiya

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-19

அடுத்தநாள் காலை கௌசி எழ, விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக் கவனித்தாள். மணியைப் பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைகடன்களை எல்லாம் விக்னேஷ் வருவதற்குள் முடித்தாள்.

விக்னேஷ் வர அவனிற்குக் காஃபியை கொடுத்து விட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு உட்காரந்தாள். "காலைல என்ன செய்யணும்?" கௌசி கேட்க, "டிபனே ஏதாவது செய்... மாமாவுக்கும் அம்மாவுக்கும் செஞ்சிரு! நான் எப்படியும் ஹாஸ்பிடல் போயிட்டு அப்புறம் தான் வளைகாப்பிற்குப் போவேன்" என்றான்.

"சரி" என்றவள் வேலைகளை ஆரம்பித்தாள்.

அவன் ரெடியாகச் செல்ல வெளியே யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. யாரென்று சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தவள் தன் தந்தையை விட வயதில் மூத்தவர் உள்ளே வருவதைப் பார்த்தாள். அவர் உரிமையாய் உள்ளே வர யாரோ தெரிந்தவர் தான் போல என்று நினைத்தவள், "வாங்க" என்று அழைத்து உட்கார வைத்தாள்.

கௌசி, "காஃபியா டீயா?"

"இல்லமா எதுவும் வேண்டாம்... விக்கா எங்கே? ரெடி ஆயிட்டானா?" என்று வினவ, அவரின், 'விக்கா' என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது.

"இருங்க கூப்பிடறேன்" என்றவள் விக்னேஷின் அறை முன் நின்று கதவைத் தட்டினாள்.

கதவை அவன் திறக்க, "உன்னைப் பார்க்க ஒரு தாத்தா வந்திருக்கிறார்" என்று சொல்ல, "மகாலிங்கம் தாத்தா கௌசி" என்று அவளை அழைத்து வந்தவன் இருவருக்கும் இருவரையும் அறிமுகம் செய்தான்.

"வாங்க டிபன் ஆச்சு சாப்பிடலாம்" என்று இருவரையும் கௌசி அழைக்க, சாப்பிட்டுவிட்டு தான் வந்தேன் என்ற மகாலிங்கம் அய்யாவை வற்புறுத்தி ஒரு இட்லியாவது என்று இருவரும் அழைத்து சாப்பிட வைத்தனர்.

சாப்பிட்டபின் ஞாபகம் வந்தவனாக விக்னேஷ், "கௌசி சொல்ல மறந்துட்டேன் பார்... வியா குட்டிக்குக் காய்ச்சலாம், ஜீவா உன்ன அங்கே வீட்டுக்கு வரச் சொல்றான். ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டாங்க... பட் நாங்க போயிட்டு வர வரைக்கும் நீ குட்டிகூட இருந்து அவள பாத்துக்க" என்று சொல்ல, "சரி" என்றாள். இருவரும் சாப்பிட்டு முடித்த பின் கௌசி கிளம்ப சென்று இருபது நிமிடந்தில் தயாராகி வந்தாள்.

"கிளம்பலாம்" என்று வந்து நிற்க விக்னேஷ் காரை எடுத்தான். மகாலிங்கம் ஐயா ஏதோ பேசபேச அவரோடு இயல்பாகவே வந்தாள்.

ஜீவா வீடு வந்ததும் மூவரும் இறங்க ஜீவா வெளியே வந்து மகாலிங்கம் ஐயாவை வரவேற்றான். மகாலிங்கம் ஐயா நல்ல பழக்கமே. அதனால் அவருக்கும் சந்தியா வளைகாப்பிற்கு அழைப்பு இருந்தது. உள்ளே மதியும் ஜீவாவும் தயாராக இருந்தனர்.

கௌசி, "அத்தை எங்கே?"

"அவங்க காலைல சீக்கரமே கிளம்பிட்டாங்க... நாங்கதான் பாப்பாக்கு காய்ச்சல்ன்னு போக முடியல" என்று மதி பதில் அளித்தாள்.

"நீங்க போயிட்டு வாங்க மதி... நான் பாத்துக்கறேன்" என்றவள், "மெடிசன் ஏதாவது இடையில குடுக்கணுமா?" என்று கேட்டாள் கௌசி. மதி டாக்டர் கொடுத்த மருந்தில் எதைக் குடுக்க வேண்டும் என்று கௌசிக்குச் சொன்னாள். எல்லாவற்றையும் சரியாகக் கேட்டுக் கொண்டவள் அனைவரையும் வழி அனுப்பி வைத்தாள்.

மூவரையும் அனுப்பி விட்டு வந்த கௌசி உள்ளே வியாஹா தூங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றாள். சுட்டியாய் இருப்பவள் இன்று காய்ச்சலில் அயர்ந்து படுத்திருப்பது கௌசிக்கு சற்று கனமாகத்தான் இருந்தது.
மெதுவாக அருகில் சென்று பெட்டின் நுனியில் அமர்ந்தவள் அவளின் பாப்கட் முடியைக் கோதி நெற்றியில் முத்தம் இட்டாள். தூக்கத்தில் விலகி இருந்த வியாஹாவின் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தி விட்டவள் அந்த அறையிலேயே ஒருசேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்து ஃபோனை நோண்டினாள்.

திடீரென போன் அடிக்க கட் செய்தவள் வெளியே ஹாலிற்கு வந்து கவிதாவிற்கு கூப்பிட்டாள். ஆம் கவிதாதான் கூப்பிட்டது.

கவிதா, "ஹலோ கௌசி"

"கவிதா" என்றவள், "சாரி கவி... நான் உனக்கு காலே பண்ணல... தப்பா நினைச்சுக்காதே" என்று மன்னிப்பைக் கோரினாள்.

"அதெல்லாம் ஒன்னும் நான் நினைக்கல கௌசி... அப்பா எப்படி இருக்காரு?" என்று கேட்டாள்.

"இப்போ பரவாலையா இருக்காரு கவி... ஆனா, நல்லா இருந்தவர தான் நான் படுக்க வச்சிட்டேன்" என்ற கௌசியின் குரல் தழுதழுத்தது.

"கௌசி அழுகாத... எல்லாமே விதி, அப்பாக்கு நடந்ததுக்கு நீ காரணம்னா, அப்போ உனக்கு நடந்ததுக்கு யார் காரணம் சொல்லு? எல்லாமே சூழ்நிலைனால நடந்தது, கூல் கௌசி" என்று தோழியாய் கௌசியை சமாதானம் செய்தாள்.

கவிதா, "சரி எல்லோரும் என்ன சொல்றாங்க, எல்லோரும் ஓகே தான உன்கிட்ட... நல்லா பேசறாங்களா எப்பவும் போல?"

"எல்லாரும் நல்லா பேசறாங்க கவி... ஆனா, என்னாலதான் பழைய மாதிரி ஆக முடியலை... எல்லார் கிட்டையும் பேச ஒரு மாதிரி தயக்கமா இருக்கு. ஏதோ என் உரிமையை இழந்த மாதிரி" என்று தவிப்புடன் சொன்னாள் கௌசி.

"அதெல்லாம் போக போக சரி ஆயிரும் கௌசி. நீ உன் ஃபேமிலி கூட சேந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஃப்ரீயா விடு" என்று கவி சொல்ல, "ம்ம்" என்று மட்டும் சொன்னாள் கௌசி.

திடீரென ஞாபகம் வந்தவளாக, "வீட்டுல சொல்லிட்டியா கவிதா" என்றுக் கேட்டாள்.

"ம்ம்" கவிதாவின் குரல் குழைந்தது.

"ஹே! என்ன வெட்கப்படறியா கவிதா?" கௌசி சிரிப்புடனே வினவ, "வந்து சொன்னப்போ அம்மா அடிச்சிட்டாங்க கௌசி... அப்பா பேசவே இல்லை. அப்புறம் ஒருவழியா பேசி ஒத்துக்க வச்சிட்டேன்... இன்னும் மூனு மாசத்துல கல்யாணம்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"வாவ் சூப்பர்! கங்கிராட்ஸ் கவி" என்று கௌசி தன் சந்தோஷத்தைத் தெரிவிக்க கவியோ, "நான் எப்போ உனக்கு சொல்றது கங்கிராட்ஸ்?" என்று கேட்க முதலில் புரியாத கௌசிக்கு பின் புரிந்தது.

"எனக்கு விக்னேஷிற்கும் கல்யாணம் கவி" என்று வெற்றுக் குரலில் சொன்னாள்.

"அப்போ இன்னும் விக்னேஷிற்கு கல்யாணம் ஆகலையா?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் கவிதா.

"இல்லை" என்ற கௌசி நான்சியின் வேலை, செந்தில்நாதன் மாமா இறப்பு, விக்னேஷ் வேலையை விட்டது என அனைத்தையும் கூறி முடித்தாள்.

"ஓ... சரி" என்ற கவிதா, "பீ ஹாப்பி கௌசி" என்றாள்.

"இல்ல கவி... ஐ’ம் நாட் அட் ஆல் ஹாப்பி... குழப்பம்தான் அதிகம் ஆயிருக்கு" என்றவள், "நம்ம ஒரு காலத்துல அழுது ஏங்குன விஷயம், நாம் வாழ்க்கையவே வெறுத்த பிறகு கிடைக்கும் போது குழப்பம்தான் வருது... சந்தோஷம் வர்றதில்லை" என்றாள்.

"இல்ல கௌசி... நீயா வாழ்க்கையை வெறுக்கல, உன்ன அந்த குருங்கற அரக்கன் வெறுக்க வச்சிட்டான். அவனே போய் சேர்ந்திட்டான், நீ அவன மறந்திட்டு மாற ட்ரைப் பண்ணு" என்று அறிவுரை வழங்கினாள் கவிதா.

"சரி கௌசி... பிரபு சார் ரௌண்ட்ஸ் வருகிறார்... நான் வைக்கிறேன்" என்றவள் ஃபோனை வைத்துவிட்டாள் கவிதா.

ஃபோனை வைத்தவள் உள்ளே சொல்ல வியாஹா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்சநேரம் தூங்கட்டும் என்று எண்ணியவள் சமையல் அறையில் கிடந்த சில பாத்திரத்தை எடுத்துப் போட்டு கழுவ ஆரம்பித்தாள்.

கவிதாவுடன் பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள். 'என்ன தான் எடுத்து சொன்னாலும் அவள் மனம் அதை ஏற்க மறுத்தது. இந்த நான்சி மட்டும் சரியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?' என்று அவளை சரமாரியாக மனதில் திட்டிக் கொண்டு இருந்தாள் கௌசி.

அதற்குள் "சித்திஈஈ..." என்ற குரலில் திரும்பியவள் வியாஹா கண்ணைத் துடைத்தபடி நின்றிருப்பதைக் கண்டாள்.

கையைக் கழுவிக் கொண்டு அருகில் செல்ல வியாஹாவோ தன் இரு கைகளைத் தூக்கி, 'தூக்கு' என்றபடி நின்றாள். அவளின் செயலை ரசித்தபடி அவளைத் தூக்கிய கௌசி அவளின் கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தாள். "வியா பாப்பாக்குக் காய்ச்சல் குறைஞ்சிருச்சு கொஞ்சம்" என்று குழந்தையின் தலையில் லேசாக முட்டினாள்.

"ஆனா, இப்போ கொஞ்சம் சாப்பிட்டுட்டு மருந்து குடிச்சா... ஃபுல்லா சரி ஆயிரும்" என்றாள் கௌசி அவளை இடுப்பில் வைத்தபடியே. "சித்தி மருந்து கசக்கும்" என்று சிணுங்கினாள் வியாஹா.

"இல்லை சித்தி நீங்க மருந்து குடிச்சா, கொஞ்சம் சக்கரை தர்றேன்... கசக்காது ஓகேவா?" என்று வினவ, "ம்... ஹும்" என்று மீண்டும் சிணுங்கியவள் தலையை ஆட்டினாள்.

வியாஹாவை உள்ளே கொண்டு சென்று டைனிங் டேபிள் மேல் குழந்தையை உட்கார வைத்தவள் மதி சொல்லியபடி ரசம் சாதத்தை ஒரு கப்பில் தேவையான அளவு போட்டு ஸ்பூனுடன் வியாஹா அருகில் வந்தாள்.

பிறகு சித்தியும் மகளும் ஏதேதோ கதைகள் பேச ரசம் சாதம் தன்னால் உள்ளே சென்றது. சாப்பாட்டை ஊட்டி விட்டபின் வியாஹாவின் வாயைத் துடைத்து விட்டவள், மருந்தையும் சர்க்கரை டப்பாவையும் எடுத்து வந்தாள்.

மதி சொன்ன அளவு டானிக்கை ஊற்றி வியாஹா வாயில் ஊற்ற கசப்பு தாங்காதவள் அப்படியே துப்ப அது அவளின் உடையிலும் கௌசி கையிலும் விழுந்தது. மருந்தைத் தன் சித்தி மேல் துப்பியதில் அரண்டு போய் கௌசியை வியாஹா பார்க்க, கௌசியோ முகம் சுளிக்காமல் பக்கத்தில இருந்த டவலை எடுத்து மருந்து சிந்திய இடத்தை எல்லாம் சுத்தம் செய்தாள். தன் அன்னையிடம் ஒருதடவை இதே மாதிரி செய்து திட்டு வாங்கிய நினைவு வர, பக்கத்தில வந்த கௌசியைத் தாவிக் கட்டி முத்தத்தைத் தந்தாள் வியாஹா.

"சித்தி... நீங்க என்ன திட்டவே மாட்டிங்களா? நீங்க ரொம்ப குட் கேர்ள்" என்று அவள் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்ச, கௌசி அந்த அன்பில் கரைந்தாள்.

"சரி... நீங்களும் இப்போ சித்தி மருந்து தருவேன் குடிக்கணும் சரியா..." என்று கேட்க அழகாய் தலையை ஆட்டினாள் வியாஹா. இந்த முறை மருந்தைக் குடித்துவிட்டு சிறிய அளவு சர்க்கரையை அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

சித்தியும் மகளும் ஹாலிற்கு வர காலிங்பெல் அடித்தது. வியாவை ஷோபாவில் உட்கார வைத்தவள் போய்க் கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த கௌசி அப்படியே நின்றுவிட்டாள். காரணம் நின்றிருந்தது மதியின் அண்ணன் சுதாகரன். வளைகாப்பில் யாருடனோ ஜீவா பேசியபோது குழந்தையை கௌசியிடம் விட்டுவிட்டு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டவன் அங்கே வீட்டிற்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு இங்கே வந்திருக்கிறான்.

'இவன் எதற்கு இங்கே வந்தான்?' என்று யோசித்த கௌசி, 'சரி பாப்பாவைப் பாக்க இருக்கும்' என்று நினைத்தாள். "வாங்க" என்று வழியை விட்டு உள்ளே விட்டாள் அவனை. வந்து உட்கார்ந்தவன் கௌசியை மேல் இருந்து கீழ்வரை அளக்க கௌசிக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.

"காஃபியா டீயா? " என்று முடிந்த அளவு பொறுமையை இழுத்து வைத்துக் கேட்டாள்.

"என்ன கேட்டாலும் கிடைக்குமோ?" என்று அவன் இரட்டை வசனத்தில் குழந்தை முன்னாலேயேக் கேட்க கௌசி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து விட்டாள்.

'அறிவு கெட்ட ஜென்மம்... பொண்ணுங்ககிட்டயும் எப்படி பேசணும்ன்னு தெரியாது. குழந்தை முன்னாடியும் எப்படி பேசுது பாரு... தறுதலை... ஆகாவலி...’ என்று திட்டிக்கொண்டே கடனே என்று ஒரு டீயைப் போட்டாள்.

அவளின் ட்ரெஸை யாரோ இழுப்பது போல உணர பதறித் திரும்ப, வியாஹாதான் அவள் சுடிதார் டாப்பை பிடித்திருந்தாள். அவளைத் தூக்கியவள் "தூக்கம் வருதா?" என்று கேட்க அவள், 'இல்லை' எனத் தலை ஆட்டினாள்.

"சித்தி மாமாவை ஏன் உள்ளே விட்டீங்க? எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அவரு என்னைத் திட்டிக்கிட்டே இருப்பாரு... லூசு மாதிரி" என்று வியாஹா சொல்ல பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்.

"ஷ்ஷ்! மெல்ல பேசு... மாமாக்கு கேட்கும்" என்று கௌசி எச்சரிக்க அவள் இடுப்பில் இருந்து கீழ் இறங்கி ஹாலிற்கு சென்றாள்.

மீண்டும் இரண்டு நிமிடத்தில் தன் துப்பட்டாவை இழுக்க, "என்ன வியாக்குட்டி வேணும்..." என்று திரும்ப அவளின் துப்பட்டா சுதாகரன் கையில் இருந்தது.

"ஏய்! என்னது இது... மரியாதையா துப்பட்டாவை விடு" என்று எச்சரித்து துப்பட்டாவை இழுக்கப் பார்த்தாள் கௌசி. ஆனால், அவனின் பிடியோ இரும்பாய் அவளின் துப்பட்டாவை பற்றி இழுத்தது. கௌசி தயங்கவே இல்லை, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த டீயை கைப்பிடியில் எடுத்து அவன் மேல் வீசிவிட்டாள்.

சுடசுட டீ தன் மேல் விழ அலறியவன் அவளின் துப்பட்டாவில் இருந்து தன்னால் கையை எடுத்தான். அதற்குள் அவனின் சத்தத்தில் ஹாலில் டிவியில் மூழ்கி இருந்த வியாஹா உள்ளே ஓடி வந்தாள். டீயை மேலே ஊற்றிய கோபத்தில் அவன் கௌசியைப் பிடிக்க வர டீப் பாத்திரத்திலேயே கையை ஓங்கினாள் கௌசி. ஆனால், அவள் முயற்சியை அவன் கையை வைத்துத் தடுத்து கௌசியின் கையில் இருந்த பாத்திரத்தைப் பிடிங்கி தூக்கி எறிந்தான்.
பாத்திரத்தை எரிந்துவிட்டு கௌசியின் தோளை அவன் முரட்டுத்தனமாகப் பற்ற கௌசி தீச்சுட்டார் போல அவனிடம் இருந்து விலகித் திமிறினாள். பின் கையைப் பிடித்து இழுக்க கௌசி சமையல் அறையின் ஜன்னலை அழுத்தமாகப் பிடிக்க அவனின் பிடியும் விடவில்லை. கௌசியின் பிடியும் ஜன்னல் கம்பியில் இருந்து தளரவில்லை.

இதை எல்லாம் பார்த்த வியாஹா சுதாகரிடம் ஓடி வந்து அவனின் காலைச் சுற்றிப் பிடித்து இழுக்க, குழந்தையால் அவனை அசைக்கக் கூட முடியவில்லை. பின் வியாஹா அவன் காலைப் பிடித்து நறநறவெனக் கடிக்க ஆரம்பிக்க அந்த ஊசிப் பற்களின் கூர்மையில் வலி எடுக்க அப்படியே காலோடு குழந்தையை உதறித் தள்ளினான்.

வியாஹா சென்று கீழே விழ பதறிய கௌசி, "அய்யோ..." என்று அவளிடம் செல்ல அதுதான் சமயம் என்று கௌசியை இழுத்தான். "விடுடா... கையை விடுடா!" என்று கத்திய கௌசியின் கண்களில் கீழே விழுந்து வலியுடன் அழுத வியாஹாவே தெரிந்தாள்.

கடைசியில் தானும் அவனின் கையைப் பிடித்துக் கடிக்க அவன் அவளை விட்டான். வியாஹாவிடம் ஓடிச் சென்று அவளைச் சமாதானம் செய்ய வெறி வந்தவனாய் சுதாகரன் கௌசியின் முடியைப் பிடிக்கப் போனான்.

வியாஹாவைத் தூக்கிய கௌசி சுதாகரைக் கவனிக்கவில்லை.
ஆனால், திடீரென்று சுதாகரின் கத்தலில் கௌசி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க விக்னேஷின் அடியில் அவன் விழுந்திருந்தான். அவனின் சட்டைக் காலரை பிடித்துத் தூக்கிய விக்னேஷ் அவனை சுவரில் தள்ளிக் காட்டுத்தனமாய் அடிக்க, கௌசி பயந்து போய் விக்னேஷைத் தடுத்தாள்.
சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தை மடையோ எதுவும் செய்ய முடியாது. அதுபோல கௌசியால் விக்னேஷை தடுக்க முடியவில்லை. விக்னேஷ் அடித்த அடியில் அவன் முன்பல் உடைந்து ரத்தம் கசிய, "விக்னேஷ்..." என்று கௌசி கத்த அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது.

இறுதியில் அவன் சட்டை காலரை தரதரவென்று வெளியே இழுத்துச் சென்ற விக்னேஷ், அவனை வெளியே தள்ளி, "இனிமேல் என் கண்ணுல உன்னை பார்த்தேன்... கொன்னுருவேன்டா பொறுக்கி நாயே... பாஸ்டார்ட்" என்று கோபத்தின் உச்சியில் கர்ஜிக்க அவன் பயந்து போனது உண்மைதான்.

"நிறுத்துடா" என்று பரமேஸ்வரியின் குரல் ஆங்காரத்தில் கத்தியது விக்னேஷைப் பார்த்து. வியாஹாவின் உடல் நலத்தைக் காரணம் கொண்டே மதியும் ஜீவாவும் எல்லா முறைகளையும் முடித்து விட்டுக் மகாலிங்கம் அய்யாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பினர். கூடவே அங்கு விஷேசத்திற்கு வந்த பரமேஸ்வரியும் முருகானந்தமும் பேத்தியைப் பார்க்க மகள் மருமகனோடு கிளம்பிவிட்டனர். வீட்டிற்கு அவர்கள் வந்து இறங்கவும் விக்னேஷ் சுதாகரனை வெளியே தரதரவென்று இழுத்து வந்து வெளியே தள்ளவும் சரியாக இருந்தது.
எல்லாரும் இறங்க விக்னேஷ் கர்ஜித்த வார்த்தை அனைவரின் காதுகளிலும் விழுந்தது. அந்தக் காலத்து டிகிரி என்பதால் பரமேஸ்வரிக்கு விக்னேஷ் சொன்ன ஆங்கில கெட்ட வார்த்தைகள் புரியாமல் இல்லை.

அந்தக் கோபத்தில், "நிறுத்துடா" என்று கத்தினார். அதற்கு மதி, "அம்மா" என்று கூப்பிட்டதையும் அவள் கவனிக்கவில்லை. அவர் கத்தியதில் கௌசியும் வியாஹை தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியே வந்தாள்.

விக்னேஷ் ஏற்கனவே பரமேஸ்வரி மீது ஒரு ஓரத்தில் கோபத்தில் இருந்தான் கௌசியைப் பேசியதற்கு (சந்தியாவின் மீதும் கோபம்தான். வளைகாப்பை சீக்கிரம் முடித்துக்கொண்டு அவன் வந்ததிற்கு அதுவும் ஒரு காரணம்). அந்தக் கோபம் இப்போது மதியின் அம்மா மேல் வெளியே வந்தது.

"இவனை இப்போதே கூட்டிட்டு போயிருங்க... இன்னும் கொஞ்சம் நேரம் இவன் இங்க இருந்தா அவன அடிச்சே கொன்றுவேன்" என்று ஆத்திரமாய் அதே சமயம் அழுத்தமாய் பரமேஸ்வரியைப் பார்த்துச் சொன்னான்.

"நான் ஏன்டா என் மகனைக் கூட்டிட்டு போகணும்? இது என் பொண்ணு வீடு" என்று அவர் ஒருமையில் பேச விக்னேஷிற்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்தது.

விஷயம் பெரிதாகப் போவதை உணர்ந்த கௌசி விக்னேஷிடம் வந்து, "விக்னேஷ்... போகலாம்" என்று சொல்ல கௌசியின் கையில் இருந்த வியாஹா இறங்கி தன் அப்பாவான ஜீவாவிடம் சென்று ஒன்றினாள்.

"எல்லாம் இவ வந்துட்டால அதான் இப்படி மறுபடியும் கேடா இருக்கு" என்று கௌசியின் பக்கம் பரமேஸ்வரி விஷத்தை கக்கினார்.

அதுவரை மதிக்காகவும் ஜீவாவிற்காகவும் பிடித்த பொறுமையை பறக்க விட்டான் விக்னேஷ். "நிறுத்துங்க... பொம்பளைன்னு பாத்தா சும்மா பேசிட்டே போறீங்க... இதே வேற எவனாவது பேசியிருந்தா இந்நேரம் கழுத்தில் காலை வச்சிருப்பேன். ஏதோ மதியோட அம்மாங்கிறனால தான் உங்களுக்கு மரியாதை தரேன்" என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தான்.

"என்னடா என்ன அடக்கறே? இவளை சொன்னோனே உனக்கு ரோஷம் வருதா. இவ ராசி கெட்டவ தான், கல்யாணம் ஆன நாலுநாள்ல புருசன முழுங்குனவ" என்று கௌசியை பரமேஸ்வரி வார்த்தைகளால் கொட்டினார்.

"அம்மா!", "பரமேஸ்வரி!" என்று பரமேஸ்வரியின் மகள் மதியும் கணவர் முருகானந்தமும் ஒருசேர அதட்டினர்.

"ஆமா, இவள சொன்னா எனக்கு ரோஷம்தான் வரும். சின்ன வயசில இருந்து என் கூட வளந்தவ... நாளைல இருந்து என் பொண்டாட்டி" என்று கௌசியின் தோளில் கையைப் போட்டு கம்பீரமாய் சொன்னவன், "அப்புறம் என்ன சொன்னீங்க ராசி கெட்டவளா? இவ என் மாமா சொல்ற மாதிரி எங்க வீட்டு மகாலட்சுமி... இவ வந்த நேரம் எனக்கு நிறைய ஆர்டர்ஸ்... அப்புறம் இயற்கை விவசாயம் பற்றிய கேஸ் எல்லாம் முடிஞ்சிருச்சு" என்று அவரின் வாயை மூட வைத்தான்.

"அப்புச்சி" என்று முருகானந்தத்தை வியாஹா அழைக்க, எல்லோரும் அவளின் பக்கம் திரும்பினர்.

"அப்புச்சி... மாமா வந்து சித்திய கையைப் பிடிச்சு இழுத்தாங்க... சித்தி அடிச்சிட்டாங்க! என்னையும் மாமா உதச்சுட்டாங்க அப்புச்சி... அதான் சித்தா மாமாவை அடிச்சாரு" என்ற வியாஹா, "இங்க வலிக்கிது" என்று தன்கையின் முட்டியைக் காட்டி அழுதது அந்தப் பிஞ்சு.

முருகானந்தம் தன் மகனிடம் திரும்புவதற்குள் மதியின் கரம் தன் அண்ணனின் கன்னத்தைப் பதம் பார்த்தது. "ச்சீ... நீயெல்லாம் ஒரு அண்ணனா? நான் உனக்கு தங்கச்சினா... கௌசியும் உனக்குத் தங்கச்சி முறைதான் தெரியுமா... ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்திருக்க பாரு நீ? அதுவும் கொழந்த முன்னாடி... என் கண்ணு முன்னாடி நிக்காதே... வெளிய போடா" என்று மதி சத்தம் போட்டாள்.

"மதிக் கண்ணு... நீ குழந்தையைத் தூக்கிட்டு உள்ள போ" என்று மகாலிங்கம் அய்யா அப்போதுதான் வாயைத் திறந்தார். குழந்தையை அந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று எண்ணிய மதி, வியாஹாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"நாங்க கிளம்பறோம்" என்ற முருகானந்தம் மனைவியை மட்டும் கையைப் பிடித்து இழுக்க, சுதாகரனும் வருவதைக் கண்டவர், "பரமேஸ்வரி நீ மட்டும் வா" என்றார்.

"ஏங்க அவன்..." என்று மனைவி ஏதோ ஆரம்பிக்க,

"இவன் உண்மையாவே எனக்குதான் பிறந்தானா பரமேஸ்வரி" என்று கேட்க,
"என்ன வார்த்தை கேக்கறீங்க" என்ற பரமேஸ்வரி கண்ணீரைச் சிந்தினார்.

"அவன் எனக்கு பொறந்தவனா இருந்தா... அவன இங்கேயே விட்டுட்டு வா... என் ரத்தம் கொஞ்சம் ஆவது உடம்பில் ஓடினால் திருந்தி என் காசில் திங்காமல் வாழட்டும்" என்று அவர் சொல்ல பரமேஸ்வரி வாயை மூடிக் கொண்டார்.

அவர் முன்னால் நடக்க பரமேஸ்வரி கணவனின் பின்னாலேயே சென்றார். கொஞ்ச தூரம்தான் இருக்கும் விக்னேஷின் அழைப்பில் திரும்பினார் முருகானந்தம். "நாளைக்கு மருதமலைல கல்யாணம், கண்டிப்பா வந்திருங்க மாமா" என்று விக்னேஷ் சொல்ல தலையசைப்புடன் அவர் சென்றார்.
 
  • Love
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-20

முருகானந்தம் குடும்பம் சென்ற பின் சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள்.

உள்ளே நுழைந்தவுடன், "ஜீ நாளைக்கே மருதமலைல கல்யாணம்" என்றான்.

"நாளைக்கே வா?" வாயைப் பிளந்தான் ஜீவா.

"நிறைய வேலை இருக்கே விக்கி" என்றான் ஜீவா.

"எதுவும் இல்லை... எனக்கு ஒரு வேஷ்டி சட்டை, கௌசிக்கு ஒரு புடவை, உங்க எல்லாருக்கும் ட்ரெஸ், அப்புறம் தாலி... ஐயர்" என்றான் தெளிவாக.

ஜீவா, "பணம் இருக்காடா?"

விக்னேஷ், "அதெல்லாம் இருக்கு ஜீ... தேவைக்கு அதிகமாவே இருக்கு"

"சரி இப்பவே கிளம்பலாம்" என்று ஜீவா சொல்ல,

"ஒரு நிமிஷம்" என்றாள் கௌசிகா.

எல்லோரும் அவளை பார்க்க, "அப்பா..." என்று இழுத்தாள் கௌசிகா.

அப்போதுதான் வரதராஜன் ஞாபகமே வந்தது அனைவருக்கும்.
மகாலிங்கம் அய்யா உள்ளே புகுந்தார், "விக்கா, நீ இதைப் பத்தி வரதராஜன்கிட்ட பேசி விடு... ஹாஸ்பிடல்ல இருந்து வந்தாலும் அவனால் கல்யாணத்திற்கு வர முடியாதேப்பா" என்று அவரும் குழம்பி எல்லோரையும் குழப்பினார்.

ஃபோன் போட்டு சுமதியிடம் விஷயத்தைக் கேட்டான் விக்னேஷ். "அம்மா, கல்யாணத்தை எப்போ வைக்கலாம்?" என்று கேட்டான்.

"இப்போ என்னடா அவசரம்... ஒரு மாசம் போகட்டும்" என்று சுமதி சொல்ல விக்னேஷ் பிடிவாதமாக நின்றான்.

சுமதி, "எதுக்கு உனக்கு அவசரம்?"

முதலில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவன் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொன்னான். பரமேஸ்வரியின் பேச்சையும் கூறினான். சுமதியிடம் இருந்து அந்த நிமிடம் போனை வாங்கிய வரதராஜன் அனைத்தையும் கேட்டுவிட்டார்.

போனில் எந்த பதிலும் இல்லாததை உணர்ந்த விக்னேஷ், "அம்மா... ஹலோ... அம்மா கேக்குதா" என்றான்.

"கேக்குது விக்னேஷ்... நீங்க நாளைக்குக் கல்யாணத்தை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க" என்று வைத்துவிட்டார்.

நடந்ததை விக்னேஷ் அனைவரிடமும் சொல்ல எல்லோரும் ஆமோதித்தனர். முதலில் தயங்கிய கௌசியும் அந்தக் கல்யாணத்தில் அப்பா இருந்து என்ன ஆனது. எல்லாம் விதிப்படிதானே நடந்தது என்று யோசித்து சமாதானம் ஆனாள்.

பின் எல்லோரும் சென்று புடவை, துணி, தாலி என அனைத்தும் எடுத்தனர். ஐயருக்கும் விக்னேஷே சொல்லிவிட்டான். மதிக்குப் பல நாளாகத் தெரிந்த டைலரிடமே ப்ளவுஸை கொடுத்தனர். அதையும் அங்கிருந்தே வாங்க, "உனக்கு வேறு ஏதாவது வேணுமா?" என்று கேட்டான் விக்னேஷ் கௌசியிடம்.

"இல்லையே... அதான் எல்லாம் வாங்கியாச்சே" என்று சொல்ல மறுபடியும்,
"நல்லா ஞாபகப்படுத்திப் பார்" என்றான் விக்னேஷ்.

"இல்ல..." என்றாள் கௌசி.

"சரி நீ என்கூட வா" என்று கௌசியின் கையைப் பிடித்த விக்னேஷ், "ஜீவா, நீங்க சாப்பிட போறன்னு சொன்னீங்கல்ல... நீங்க போய் சாப்பிட்டுட்டு இருங்க... நாங்க வந்திடறோம்" என்று சொல்ல அனைவரும் அவர்களை விட்டுவிட்டு அகன்றனர்.

கௌசியை அவன் கூட்டிச் சென்ற இடம் "லாக்மீ காஸ்மெட்டிக்ஸ்" (Lakme cosmetics). அவனும் கம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்து தான் இருக்கிறான். அத்தனை காஸ்மெட்டிக்ஸ் ஆசை ஆசையாக வாங்குபவள் இப்போது ஒன்றுமே இல்லாமல் இருப்பது அவனை உறுத்தியது.

"ஏன் இங்கே?" என்று தாங்கியபடியே கேட்டாள் கௌசி.

"இதெல்லாம் நீ யூஸ் பண்றதுதானே... வா வாங்கலாம்" என்று அழைக்க அவளோ நகராமல் நின்றான்.

"இல்லடா... நான் இதெல்லாம் இப்போ யூஸ் பண்றது இல்லை" என்றாள் எங்கோ பார்த்தபடி.

விக்னேஷ், "ஏன்?"

என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றாள்.

"இதெல்லாம் நீ எவ்ளோ ஆசையா வாங்குவனு எனக்குத் தெரியதா?சொல்லு ஏன் வேண்டாம்?" என்று வினவினான்.

"இல்லடா... அந்த இன்சிடெண்ட் அப்புறம் எதுவும் இதைப்பத்தி எல்லாம் தோனல அதான்" என்றாள் கௌசி சின்னக்குரலில்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன், "இங்க பாருடி... நீ நாளைல இருந்து வெறும் கௌசிகா இல்ல... கௌசிகா விக்னேஷ்வரன்" என்று அழுத்தமாகக் கூறியவன்,
"நீ நாளைல இருந்து பழைய மாதிரி இரு" என்று உள்ளே அழைத்துச் சென்றான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவள் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றையும் வாங்கிக் குவித்தான் விக்னேஷ்.

இருவரும் சாப்பிட வர எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவரவர் வீடு திரும்பினர். மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு விக்னேஷும் கௌசியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"விக்னேஷ்..." என்று அழைத்தாள் கௌசி.

"என்ன" என்பது போலத் திரும்பிப் பார்த்தான் விக்னேஷ்.

"எதுக்குடா என்னை கல்யாணம் பண்ற, திடீர்னு ஏன் இந்த முடிவு?" என்று கேட்டாள் கௌசிகா. அந்தக் கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான் விக்னேஷ்.

'என்ன என்று சொல்லுவான்? உனக்கு கல்யாணம் ஆன அன்று, உன் மேல் எனக்கு காதல் வந்தது என்றா?' (அவனைப் பொறுத்த வரை அவள் குருவை ஏற்று வாழ்ந்தாள்தானே). 'இப்போது அதைச் சொல்லி இவள் நம்மைத் தப்பாக நினைத்து விட்டால்?' என்று நினைத்தான். ஆனால், உண்மையை மறுக்கவும் அவன் விரும்பவில்லை.

"உன்னை எனக்குப் புடிச்சிருக்கு கௌசி" என்று மொட்டையாகச் சொல்லிவிட்டான்.

"உனக்கு என்னை எப்பவுமே புடிக்கும்டா... அது தெரியும்... நான் கல்யாணத்தை பத்திக் கேட்கிறேன்" என்று விடாமல் கேட்டாள்.

"ஏன் கௌசி... அது போதாதா நான் உன்னைக் கல்யாணம் பண்ண?" என்று கேட்டான்.

"நம்ம குடும்பத்துக்காகத்தானே என்னை நீ கல்யாணம் பண்ற?" என்று மனதில் நினைத்ததைத் கேட்டு விட்டாள்.

விக்னேஷ், "இல்லடி... உனக்காக"

கௌசிகா, "என்ன வாழ்க்கை குடுக்கிறியா?"

"இல்லவே இல்லைடி... உன்கூட இருக்கணும்ன்னு தோனுச்சு... உன்னைவிட எனக்கு மனசு இல்ல" என்று சொல்லாமல் தன் காதலை சொன்னான். ஆனால், கௌசிக்குத்தான் அது புரியவில்லை. எப்படிப் புரியும். இந்த விக்னேஷ் வாயைத் திறந்து சொன்னால்தானே. (எஸ் ஜே சூரியா மாதிரி பேசிட்டு இருக்கான் மாங்கா)

கௌசி மறுபடியும் ஏதோ கேட்க வர, விக்னேஷிற்கு ஜீவா ஃபோன் செய்தான். ஃபோனை எடுத்துக்கொண்டு அவனிடம் பேசச் சென்று விட்டான் விக்னேஷ். பின் அவன் திரும்பி உள்ளே வர கௌசி ஹாலில் முந்தைய நாளைப் போலவே பெட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு இருந்தாள்.

"கௌசி..." விக்னேஷ் அழைத்தான்.

"ம்ம்" என்றாள் பெட்ஷீட்டை விரித்தபடியே.

"நாளைக்கு காலைல 6.30 டூ 7.30 முகூர்த்தம்" என்று சொன்னான்.

"ம்ம் சரி..." என்றுவிட்டுப் படுத்தாள்.

ஒரு நிமிடம் அவளை முறைத்தவனுக்கு சிரிப்பே வந்தது. 'டேய் விக்னேஷ்... உன்ன மாதிரி பொண்ணு எவனுக்கும் கிடைக்கமாட்டா டா... நீதான் வெக்கப்படணும் போல... இவட்ட அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது’ என்று தனக்குத்தானே நினைத்துச் சிரித்தான்.

அடுத்தநாள் காலை எழுந்த இருவரும் பரபரப்பாக கிளம்பினர். மகாலிங்கம் அய்யா வீட்டிற்கு வர, விக்னேஷும் வர இருவரும் பேசிக்கொண்டிருந்த போது கௌசியும் வெளியே வந்தாள்.

நேற்று எடுத்த சிவப்பு பட்டுப்புடவை அவளைத் தழுவி இருக்க கையில் வளையல், காதில் ஒரு சின்ன ஜிமிக்கி, மற்றும் கழுத்தில் ஒரு ஒற்றை செயின் என அணிந்திருந்தாள். அவன் வாங்கித் தந்த காஸ்மெட்டிக்ஸையும் அவள் லைட்டாகப் போட்டிருக்க அவள் தேவதையாகத் தெரிந்தாள்.

வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தவனிடம் மகாலிங்கம் அய்யா கிசுகிசுத்தார். "போதும் விக்கா... தண்ணி டேன்ங்க க்ளோஸ் பண்ணு" என்று சொல்ல சுயநினைவிற்குத் திரும்பினான். நல்லவேளை சேலை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த கௌசி இதை கவனிக்கவில்லை.

மூவரும் மருதமலை செல்ல அங்கு ஜெயா, சதாசிவம், ஜீவா, முருகானந்தம், மதி, வியாஹா, சுமதி, சந்தியா அவளின் கணவன் ரமேஷ் என அனைவரும் நின்றிருந்தனர். விக்ரமும் (அதான் போட்டோகிராஃபிஸ்ல விக்னேஷுடன் இருப்பவன்)

கௌசி அக்னியை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தாள். முதலில் நடந்தது எல்லாம் அவள் கண்முன் வந்து சென்றது. உதட்டின் மேலும் நெற்றியிலும் விடாமல் வியர்த்துக் கொட்டியது. அவளைப் பார்த்த மதி அவளின் அருகில் சென்று கர்ச்சீப்பால் நெற்றியிலும் உதட்டிலும் ஒற்றி எடுத்து கௌசியின் கையிலேயே கர்ச்சிப்பை கொடுத்தாள்.

ஐயர் தாலியை எடுத்துத் தர தன் மாமன்மகள் கௌசியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி விக்னேஷ்வரன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.

மூன்றரை வருடங்களுக்கு பின் விக்னேஷின் மனதில் எழுந்த நிம்மதியையும் நிறைவையும் சொல்ல அவனுக்கு வார்த்தைகள் கிடையாது. சூழ இருந்த அனைவரின் முகத்திலும் அதே நிறைவு தெரிந்தது.

அனைவரும் கடவுளை தரிசித்து விட்டு கீழே இறங்கி நேராக சென்ற இடம் வரதராஜன் இருந்த ஹாஸ்பிடல். மகளையும் மருமகனையும் மணக்கோலத்தில் பார்த்த வரதராஜனிற்கு மனம் நிறைந்தது. இருவரும் அவரது காலைத் தொட்டு வணங்கிக் கொள்ள தனது ஆசிர்வாதத்தைத் தந்தார்.

ஜெயாவும் சுமதியும் ஏதோ பேசிக்கொள்ள மதியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். "ரைட்ரா... ப்ளான் ஏதோ பண்றாங்க... நாம் இதுக்குள்ள போகமா இருக்கிறது நல்லது" என்று தனக்குள் பேசிக்கொண்டான் ஜீவா அவர்களை கவனித்துவிட்டு.

"அண்ணா... இன்னிக்கு நான் உங்க கூட இருக்கேன்" என்றார் ஜெயா தாமாக.

"சரிம்மா..." என்றவர் அயர்வாக கண்களை மூடிக் கொண்டாள்.

எல்லோரும் சொல்லிவிட்டுக் கிளம்பி கீழே வந்தனர். நேராக ஜீவா வீட்டிற்குப் போகலாம் என்று சொல்ல, "ஏன்" எனக் கேட்டான் விக்னேஷ். எதையோ சொல்லி சமாளித்தார் சுமதி. ஜீவாவின் வீட்டை அடைய சுமதி ஜீவாவைத் தனியாக அழைத்து, ஜீவாவிடம் பணத்தைக் கொடுத்து, "போ" என்றார்.

"சித்தி..." என்று ஜீவா இழுத்தான்.

"புரியுது ஜீவா... ஆனா, சம்பிரதாயங்களை செய்துதான் ஆக வேண்டும்... விக்னேஷிடம் கேட்டால் வேண்டாம்ன்னு சொல்லுவான்... நீ மதியையும் கூட்டிட்டுப் போய் நான் சொன்ன மாதிரி செய்" என்றார் சுமதி.

"சரி சித்தி" என்று அவன் கிளம்பிவிட்டான் மதியைக் கூட்டிக்கொண்டு.

சந்தியாவின் கணவரிடம் நன்கு பேசிய கௌசி, சந்தியாவிடம் திரும்பவில்லை. கௌசிக்கு அந்த அளவு அன்று சந்தியா பேசியதில் கோபமும் ஏமாற்றமும் இருந்தது.

"கௌசி... ஸாரி கௌசி... அன்னிக்கு நான் பண்ணியது தப்புதான்... அன்னிக்கு பரமேஸ்வரி அத்தை என்னிடம் ஏத்தி விட்டது உன்கிட்ட அப்படி பேச வைத்துவிட்டது. இருந்தாலும் சுயபுத்தி இல்லாம நான் பேசுனது தப்புதான் கௌசி. ஸாரி... என்கிட்ட பேசு" என்று தப்பை உணர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக சந்தியா பேச கௌசிக்கு மனம் கரைந்தது.

"சரி விடு சந்தியா... அதை எல்லாம் மறந்திடு" என்ற கௌசி கொஞ்சம் இயல்பாகப் பேசினாள் சந்தியாவிடம்.

மூன்று மணிநேரம் கழித்து ஜீவாவும் மதியும் வர, விக்னேஷோ அலுப்பில் ஷோபாவிலே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தான். கௌசி, சுமதி, சதாசிவம், சந்தியா, ரமேஷ், மகாலிங்கம் அய்யாவுடனும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

விக்னேஷை சுமதி எழுப்ப எழுந்தவன் தூக்கக் கலக்கத்திலே எழுந்து சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தான். எல்லோரும் அமர சுமதியும் மதியும் பரிமாறினர். பின் அவர்கள் இருவரும் அமர சுமதிக்கும் மதிக்கும் கௌசியும் சந்தியாவும் பரிமாறினாள்.

வியாஹாவுடன் விக்னேஷ் விளையாட, ஜீவா ஏதோ யோசனையிலேயே இருந்தான். "ஏன்டா... என்ன யோசனை?" என்று விக்னேஷ் தோளில் அடித்து வினவ, "இல்லடா... ஆபிஸ் யோசனை" என்று சமாளித்தான் ஜீவா.

வளைகாப்பு முடிந்து விட்டதால் சந்தியா இங்கேயே தங்க, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான் சந்தியாவின் கணவன் ரமேஷ். மதி ஏதோ கண்களால் ஜாடை செய்ய சுமதி, 'நான் பாத்துக்கறேன்' என்பது போலக் கண்களை மூடித் திறந்தார்.

"சரி கிளம்பலாம் டைம் ஆச்சு" என்று விக்னேஷ் எழுந்தான்.

"விக்னேஷ் நான் வரல... சந்தியா வந்திருக்கால்ல... அவ என்னை இருக்க சொன்னா" என்று சொல்ல, 'நான் எப்போ?' என்பதைப் போலப் பார்த்தாள் சந்தியா.

சந்தியா தனியா இருக்க வேண்டாம் என்று எண்ணிய விக்னேஷும், "சரி நீங்க காலைல முடிஞ்சா வாங்க... இல்லைனா இங்கியே தங்கிட்டு காலைல அப்படியே ஹாஸ்பிடல் போறேன்னாலும் போங்க... உங்களுக்கு எது சவுகரியம்ன்னு பாத்துக்கங்க" என்று சொல்லிக் கொண்டு கௌசியையும் மகாலிங்கம் அய்யாவையும் கூட்டிக் கொண்டுக் கிளம்பினான்.

மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு இருவரும் வீட்டை அடைந்தனர்.ப்ரௌனி வந்து இருவரின் காலையும் சுற்ற கௌசி ப்ரௌனியைத் தூக்கிக் கொஞ்சினாள். "தங்கக்குட்டி" என்று ப்ரௌனியைக் கொஞ்சி முத்தமிட்டவள் கழுத்தை நீவி விட்டு செல்லம் கொஞ்சினாள்.

கௌசி நிமிர விக்னேஷ் அவளைத்தான் கையைக் கட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான். "என்னடா உள்ள போகலையா?" என்று கேட்டாள்.

"சாவி வாங்குனியா?" என்று கேட்டான் குறுஞ்சிரிப்புடன்.

"அப்போ நீ வாங்கலையா?" என்று கேட்க விக்னேஷ் தலையில் கை வைத்தபடி நின்றான்.

தன் அன்னைக்குப் போன் போட்டவன், "அம்மா, சாவி உங்ககிட்டையா?" என்று வினவினான்

"அட ஆமாம்" என்றவர், "சரி விக்னேஷ், மணி எட்டாச்சு... இனி நீ கிணத்துக்கடவுல இருந்து இங்க வர வேணாம். பேசாம நம்ம மாடி அறைக்கு போய் தங்கிக்கோங்க" என்று சுமதி சொல்ல விக்னேஷிற்கு ஏதோ இடிப்பது போல இருந்தது.

"சரிம்மா" என்றவன் ஃபோனை அணைத்தான்.

"என்ன சொல்றாங்க?" என வினவினாள் கௌசி.

"சாவி இனி வந்து வாங்கிட்டு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்கடி... மேல இருக்க ரூமுக்கு போக சொல்லிட்டாங்க" என்றான்.

"மேல ரூம் இருக்கா என்ன?" என்று கேட்டாள் புருவமுடிச்சுடன்.

"ஆமாடி... சின்ன ரூம்தான் வா" என்று அழைக்க கௌசி, அப்படியே தயங்கி நிற்பதைக் கண்டான். அவள் தயங்கி நிற்பதைக் கண்டவனுக்கு முதலில் புரியவில்லை.

சில நொடிக்குப் பிறகே புரிந்தது. அன்றைய இரவு அவர்களுக்கு என்ன இரவு என்று. இருவரும் அதைப் பற்றி அவ்வளவாக எண்ணவில்லை. சில நொடிகள் இருவருமே சங்கடமாக உணர, "கௌசி வா, மேல இரு... இருக்க கட்டில் கொஞ்சம் பெருசுதான்" என்று சின்னக்குரலில் அழைத்தான்.

"ம்ம்" என்று கௌசி சொல்ல, இருவரும் வீட்டிற்கு வெளியில் இருந்த படியிலேயே ஏறி மாடிக்குச் சென்றனர். மேலே இருவரும் வர விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். கௌசியும் பின்னோடு வந்து நின்றாள். விக்னேஷ் இருட்டில் தேடிச்சென்று லைட்டைப் போட, வந்த வெளிச்சத்தில் அறையைக் கண்ட இருவருமே அதிர்ந்தனர்.
 
  • Like
  • Love
Reactions: Malar and Sowmiya

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-21

அறையின் கோலத்தைக் கண்ட இருவருமே உறைந்து நின்றனர். விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது. அதற்கு யார் உதவி இருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் கடித்தவன் கௌசியின் ஞாபகம் வந்தவனாக அவளிடம் திரும்பினான். அவள் நின்ற கோலத்தைக் கண்டு அவன் அதிர்ந்து விட்டான்.

அறையின் கோலத்தைக் கண்ட கௌசிக்கு பழைய ஞாபகம் எழுந்தது. பழைய கோர நினைவுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கோரமாக எழ கௌசி நடுங்கி விட்டாள். ஏனோ அந்த அறை கண் முன் வந்து நின்று அவளை மூச்சடைக்க வைத்தது.

அவளை ஏதோ மரண வாசலுக்கு அழைத்துப் போவதைப் போல உணர்ந்தாள். விக்னேஷின் உருவமும் அவளுக்கு குருவின் உருவம் போலத் தெரிய அவள் மூன்றரை வருடத்திற்குப் பின்னால் சென்றாள்.

அவளின் வியர்த்த முகத்தைப் பார்த்து விக்னேஷ் அருகில் செல்ல, "வேண்டாம் குரு... ப்ளீஸ் என்னை விட்டிடு" என்று பின்னால் நகர்ந்தவள் நிலைப்படித் தட்டிவிட்டு கீழே விழப் பார்த்தாள்.

"கௌசி!" என்று ஓடி வந்தவன் அவளை பிடிக்க, கௌசி அலறி இரவு நேரத்தில் சத்தம்போட, அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான்.

கதவை அடைத்ததில் கௌசி இன்னும் பயந்து, "வேண்டாம் குரு... என்னை விட்டிடு... நான் என் அப்பா, என் விக்காகிட்டையே போறேன்" என்று கதறியவள் விக்னேஷின் காலில் விழ, விக்னேஷ் பயந்துவிட்டான்.

அவளை எழுப்ப, "ப்ளீஸ்... என்னைத் தொடாதே" என்று பின்னால் நகர்ந்தாள் கௌசி. அவளைத் தோளைப் பிடித்து உலுக்கிய விக்னேஷ், "கௌசி! நான் குரு இல்லை... விக்னேஷ்... நல்லாப் பாரு... நான் விக்னேஷ்" என்று கத்தி உலுக்க கௌசிகா நினைவிற்கு வந்தாள்.

சுயநினைவிற்கு வந்தவளால் எதையுமே யூகிக்க முடியவில்லை. விக்னேஷ் அருகில் இருப்பதை உணர்ந்தவள் தன்னை அறியாமல் அவனைக் கட்டிப் பிடித்து விட்டாள். "விக்கா... விக்கா..." என்றுத் திக்கி திக்கி கௌசி அழ, அவன் அவளைச் சமாதானம் செய்தான்.

"கௌசி அழாதே... அழாதே" என்று சொன்னவன் அவளை இறுக அணைத்தான். அவனது அணைப்பில் கொஞ்சம் சமாதானம் ஆனவள் நிதானம் பெற்று அவனிடம் இருந்து விலகினாள்.

"ஸா... ஸாரிடா" என்றாள் தலைக் குனிந்து.

"அதெல்லாம் ஒன்னு இல்லை விடு..." என்றவன், "சரி எந்திரி மேல உட்கார்" என்று சொல்ல கௌசியும் மேலே ஏறி உட்கார்ந்தாள்.

அறை அலங்காரங்கள் ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்தான். அதுவே கௌசி பயத்திற்கு காரணம் என்று நினைத்தவன் முதலில் அதை எடுக்க வேண்டும் என்று நினைத்து அதை எல்லாவற்றையும் நீக்கினான்.

கௌசியின் அருகில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தவன், "கௌசி..." என்று அழைத்தான்.

கௌசிகா, "சொல்லுடா"

"குரு கூட நீ..." என்று ஆரம்பித்தவன், "குரு உன்னை சந்தோஷமாவச்சிருந்தானா கௌசி?" என்று நேரிடையாகக் கேட்டுவிட்டான்.

கௌசியால் பதில் சொல்லவே முடியவில்லை. என்ன என்று சொல்லுவது என்று தெரியாமால் உட்கார்ந்திருந்தாள். "சொல்லுடி... குரு உன்னை நல்லபடியா வச்சிருந்தானா?" என்றுக் கேட்டான்.

கௌசியின் தலை, 'இல்லை' என்பது போல வலமும் இடமும் ஆடியது. பழைய நினைவுகளில் கண்ணீர் கோர்த்தது. "என்ன ஆச்சுடி... புடிச்சுதானே கல்யாணம் பண்ண... அவன்கிட்ட பேசிட்டுதானே இருந்த" என்றுக் கேட்டான். (டேய் விக்னேஷ் முட்டாள்... அவ உன்கிட்ட சொன்னாளா)

அதற்கும் இல்லை என்பது போல தலை ஆட்ட அவளின் தாடையை கன்னத்தோடு புடித்தவன், "என்னதான்டி ஆச்சு... சொல்லு" என்று கோபமாகக் கேட்டான்.

"நீ அழுததுலயே ஏதோ தப்பா எனக்கு புரியுது கௌசி... என்னதான் ஆச்சுடி? சொன்னாதானே தெரியும்" என்றுக் கேட்டான்.

அவன் கண்களில் தெரிந்த பாசத்தையும் வேதனையையும் கண்டவள் அவன் மார்பில் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள். (அதாவது கணவனாக நினைத்து இல்லை... ஏனோ பழைய விக்காவின் உரிமை அவளுக்கு வந்தது)

அவளது தலையை விக்னேஷ் வருட அவளது அழுகை அவனின் செயலில் இன்னும் அதிகம் ஆகியது, "விக்கா... அவன் ஒன்னும் ஜீவா கல்யாணத்துல பாத்துட்டு அப்பாகிட்ட பொண்ணு கேக்கல. அவன் என்னோட பர்த்டே அன்னிக்கு வெளிய போனோம் ஞாபகம் இருக்கா? அங்கேதான் என்னைப் பார்த்து இருக்கிறான்"

"அங்கேயா?" சற்று அதிர்ந்தான் விக்னேஷ்.

"ஆமாடா... அவனுக்கு ஸ்கூல்லயே என்னைத் தெரியுமாம்" என்றவள் கௌசியின் ஆட்டிட்யூடை அவன் திமிராக எண்ணியது, மேலும் நான்சியிடம் பேசியதை கேட்டுக் கொண்டு அவனாக ஒன்றை நினைத்தது என எல்லாவற்றையும் சொன்னாள்.

"இதுக்கும் உன்னைக் கல்யாணம் செய்ததிற்கும் என்ன சம்மந்தம்?" என்று குழம்பினான்.

"என் திமிரை அடக்கவாம்டா" என்றவள், அவனிடம் இருந்த விலகி, "என்னைப் பாத்தா அப்படித் தெரியுதா விக்கா?" என்று இருபத்தாறு வயதுக் குழந்தையாய் அழுதாள்.

அவளை அணைத்தவன், "ஏய் அப்படி எல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னடி தப்பு? திமிரா இருக்கிறதெல்லாம் தப்பில்லைடி" என்று தட்டிக்கொடுத்து விலகினான்.

"இதுக்காடி இப்படி அழறே?" என்று கேட்டான். 'இல்லை' என்பது போலத் தலை ஆட்டியவள், "அவன் என்னை..." என்றவள் அப்படியே வாயை மூடினாள் சொல்ல முடியாமல்.

"சொல்லுடி... என்ன?" என்று பதட்டமான இதயத்தோடு கேட்டவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது கௌசியை கல்யாணத்திற்கு சம்மதிக்க அவளோடு நடந்த பேச்சு வார்த்தையில் அவள் அவனிடம் வெர்ஜினிட்டி பத்திப் பேசியது. ஒரு நிமிடம் உறைந்தவன் கௌசியைப் பார்க்க அவளது உதடுகள் அழுகையில் துடித்துக் கொண்டு இருந்தது.

"அவன்..." என்று ஆரம்பிக்க, "வேண்டாம்டி. விடு" என்றான் வேதனைக் குரலில்.

"இல்லாடா... அவன் என்னை... ஹீ ஃபோர்ஸ்ட் மீ டா... என்ன இஷ்டம் இல்லாமல், என்னை..." என்று ஆரம்பித்தவள் தாங்க முடியாமல் விக்னேஷின் மடியில் படுத்து கதறினாள்.

"ஒரு பொண்ண எப்படி எல்லாம் கொடுமை படுத்தக்கூடாதோ அதெல்லாம் பண்ணான்டா... என்னால அதை வெளில சொல்லக் கூட முடியாதுடா. என் உடம்புல இன்னும் சிலதெல்லாம் தழும்பா இருக்குடா" என்று அவன் வயிற்றைக் கட்டிக் கொண்டு கதறி வாய்விட்டு அழுதவளைக் கண்டு விக்னேஷிற்கு மனம் வலித்தது.

'ஏன்டா கேட்டோம்?' என்று இருந்தது விக்னேஷிற்கு. அவள் சொல்லி அழுவதை சகிக்கவும் முடியவில்லை. குரு அவளைப் பண்ணிய கொடுமையை நினைத்தவனுக்கு தானும் இதில் தவறு செய்துவிட்டோம் என்று தோன்றி அவன் மனசாட்சி அவனைக் குத்தியது. அவன் யோசிக்குப் போதே கௌசி மேலே தொடர்ந்தாள்.

"எனக்கு அடுத்த நாள்தான் தெரிஞ்சது அவன் சைக்கோன்னு" என்று கௌசி சொல்ல விக்னேஷிற்கு தலையே சுற்றியது. ஏதோ சினிமா பார்ப்பதுபோல இருந்தது அவனிற்கு.

"ஏன்டி இவ்வளவு நடந்திருக்கு... எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல... நான் எல்லாம் உன்ன வந்து கூட்டிட்டு வந்திருப்போமேடி" என்றவனுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

"இல்லடா... அப்பாக்கு ஏற்கனவே சுகர், நீயும் கனடால இருந்து வந்திருவே... அப்பறம் அத்தை மாமா அவ்வளவு சந்தோஷமா என்னை அனுப்பி வச்சாங்கடா... எல்லாத்துலையும மண் அள்ளி போட நான் விரும்பலை. ஆனா, அந்த நாலுநாள் எனக்கு நரகம் விக்கா... கொஞ்சநாள் இருந்திருந்தா நானே தானா செத்துப் போயிருப்பேன்டா" என்று அவள் பேச அவளைத் தன் மடியில் இருந்து எழுப்பியவன் அவளை அணைத்தான்.

"ப்ளீஸ் கௌசி" என்று கெஞ்சியவன், "இதுக்கு மேல எதுவும் சொல்லாதேடி..." என்று அவளை மேலும் தன்னோடு இறுக்கினான்.

"கௌசி... இதெல்லாம் தெரியாம உன்ன அடிச்சிட்டேன்டி... அப்புறம் நீ ஹர்ட் ஆகற மாதிரியும் பேசிட்டேன். ரொம்ப ஸாரிடி! அந்த குருவை மற... அப்படி இப்படின்னு லூசு மாதிரி பேசிட்டேன். தயவுசெய்து என்ன மன்னிச்சிருடி" என்று தன் மன்னிப்பை அவளிடம் யாசித்தான்.

விக்னேஷ், "என்னடி பதிலே பேச மாட்டிறே?"

வேற ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவன் கேட்ட மன்னிப்பிற்கு அவனை மன்னித்திருப்பாள். ஆனால், இது கௌசிகா அல்லவா. விக்னேஷ் அவளைப் பார்க்க இடது கன்னத்தில் அறைந்தவள், "இது குருவை கல்யாணம் பண்ண சொல்லி என்ன கேட்டியே அதுக்கு" என்றாள்.

அடுத்து வலது கன்னத்தில் அறைந்தவள் "இது என்னை ஜீவா வீட்டில் அறைந்ததிற்கு" என்றாள் சிறுபிள்ளைபோல முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு.

"கௌசி..." என்றான் விக்னேஷ் அவளை அணைத்தபடியே. ஏதோ அவள் அறைந்ததுகூட அவனுக்கு சுகமாக இருந்தது.

கௌசி, "சொல்லு"

"ஐ லவ் யூ டா கௌசிக்" என்று அவளை அணைத்து அவளின் கழுத்தில் புதைந்தான். பல வருடங்களுக்குப் பிறகு விக்னேஷிற்கு பழைய குறும்பு எட்டிப் பார்த்தது. கௌசியுமே விக்கா என்று ஆரம்பித்திருந்தாள்.

அவன் சொன்ன வார்த்தையில் கௌசியின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்தது. அவனிடம் இருந்து விலக எண்ணி கௌசி விலகப் பார்க்க, "ப்ளீஸ்... டூ மினிட்ஸ்" என்றான்.

தானாக அவளை விக்னேஷ் விட, "எதுக்கு, இப்போ இந்த ஐ லவ் யூ?" என்று கேட்டாள்.

"ஐ லவ் யூ எதுக்கு சொல்லுவாங்க... எனக்கு உன்னப் புடிச்சிருக்கு" என்று தோளைக் குலுக்கி பதிலளித்தான்.

"ப்ளீஸ்டா... நீ ஒன்னும் பாவப்பட்டு சொல்ல வேண்டாம்" என்று கூறினாள் கௌசிகா கூம்பிய முகத்துடன்.

"இல்லை டி... சத்தியமா ஐ லவ் யூ!" என்றான் அவள் தலை மேல் தன் கையை வைத்தபடி. கௌசி குழப்பமாகவும் சந்தேகமாகவும் அவனைப் பார்க்க, அவளின் இரு கன்னத்தைப் பிடித்துத் தாங்கியவன். "சீரியஸ்லி டி... ஐ லவ் யூ" என்றவன் அவளின் நெற்றியில் முத்தத்தைத் தந்தான்.

பிறகு நகர்ந்து உட்கார்ந்தவன், "கௌசி... இப்போதைக்கு உனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்லைன்னு தெரியும். நானும் உன்ன கம்பெல் பண்ணல... காலம் தன்னால எல்லாத்தையும் மாத்தும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்குடி" என்றவன்,

"பழசு எல்லாத்தையும் மறந்திடு கௌசி... எதையும் நினைக்காம படுத்துத் தூங்கு. இனி எல்லாம் நன்மைக்கே" என்று பேசியவன் பெட்டின் ஒரு பக்கம் தலையணையைப் போட கௌசி அப்படியே உட்கார்ந்து அவனைப் பார்ப்பதைக் கண்டான்.

"ஏன்டி இப்படிப் பாக்கறே?" என்று கௌசியிடம் கேட்டான்.

"இல்ல... மூணு நாளைக்கு முன்னாடி என்கிட்ட கம்பத்துல எப்படி பேசுனே, இப்போ எப்படி பேசறே?" என்று கௌசிக்க யோசித்தபடியே அவனிடம் கேட்க,

"எதையும் குழப்பிக்காம தூங்குடி" என்று அவன் சொல்ல அவள் பெட்டின் ஒரு பக்கம் வந்து படுத்தாள்.

அப்போதே விக்னேஷ் பேசி இருக்கலாம் அவளைக் காதலித்ததைப் பற்றி. விக்னேஷும் லைட்டை அணைத்து விட்டு வந்து ஒருபக்கம் படுக்க அன்றைய அலுப்பில் கௌசிக்கு சீக்கிரமே கண்களைக் கட்டியது. ஆனால், ஜீவாவின் வீட்டில் தூங்கியதாலோ என்னவோ விக்னேஷிற்குத் தூக்கம் வரவில்லை.

மனதில் கௌசி சொன்னதே அவன் கண்ணில் வந்து வாட்டியது. அவளிடம் அவன் காட்டாவிட்டாலும் மனதில் சொல்ல முடியாத வேதனை எழுந்தது. குருவின் வீட்டில் அவனால் அவள் பட்ட நரக வேதனையை நினைக்கவே இவனிற்கு நெஞ்சமெல்லாம் அதிர்வாக இருந்தது.

அதுவும் கௌசி, "இன்னும் சிலது என் உடம்பில் தழும்பாக இருக்கு" என்று சொன்னது அவனை நடுங்கச் செயத்து. தழும்பு விழும் அளவு என்றால் எந்த அளவிற்கு இவளை அவன் கஷ்டப்படுத்தி இருப்பான். செத்தவனை மறுபடியும் தோண்டி எடுத்து கூறு போட விக்னேஷின் மனம் கொதித்தது.

எவ்வளவு தைரியமாக இருப்பவளை அவன் மணந்து ஆட்டி மிரட்டி தன்னுடன் இருக்க வைத்திருக்கிறான் என்று நினைத்தவனுக்குத் தன் தலை நரம்புகள் எல்லாம் கோபத்தில் புடைத்தது. காதில் கேட்கக் கூட முடியாத கெட்ட வார்த்தைகளால் குருவைத் திட்டிக் கொண்டு இருந்தான் விக்னேஷ். பின் அவனும் அன்றைய நாளை இன்னொரு முறை யோசித்துப் பார்த்தபடியே கண்களை மூடினான்.

அடுத்தநாள் காலை விக்னேஷ் எழ, கௌசி அருகில் இல்லை. வெளியே வந்தவனின் முகத்தில் வெயில் நன்றாகவே அடித்தது. அவன் கீழே செல்ல குடும்பமே கூடி இருந்தது கௌசி உட்பட. (ஹாஸ்பிடலில் இருக்கும் ஜெயா வரதராஜனைத் தவிர)

தன் அன்னையையும் ஜீவாவையும் முறைத்தவன், "ஜீ, ஒரு நிமிடம் உள்ள வாயேன். ஒரு பேப்பர்ஸ் பாக்கணும்" என்றுவிட்டு அவன் அறைக்குள் நுழைய, ஜீவா அவன் பின்னே சென்றான்.

ஜீவா வந்தவுடன் கதவை சாத்திய விக்னேஷ், அவனின் மீது போர்வையை போட்டு மூடி நேற்று அவன் செய்த அறை அலங்காரத்திற்கு விக்னேஷ் பூஜை நடத்தினான். "டேய்! டேய்! வலிக்குதுடா விக்கி" என்று கூற அவனை விட்டான் விக்னேஷ்.

விக்னேஷ், "நேத்து ஏன்டா அப்படி பண்ணே"

"டேய் எல்லாம் சித்திதாண்டா... நானாக எதுவும பண்ணல புரிஞ்சுக்க" என்றான் ஜீவா, விக்னேஷ் பதம் பார்த்த தன் முதுகைத் தேய்த்தபடி.

"என்கிட்ட முதலே சொல்லி இருக்கலாம்ல ஜீ" விக்னேஷ் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி.

"இல்லடா சம்பிரதாயம் கரெக்டா நடக்கணும்னு சொன்னாங்க சித்தி... எனக்கு தெரியும். உனக்கு கௌசிக்கும் தெரிஞ்சா இப்ப இருக்க சூழ்நிலைல ஒத்துக்க மாட்டிங்கன்னு... பட், என்னால சித்திய சமாளிக்க முடியலடா... சரி நீ எப்படியும் சமாளிச்சுருவேன்னு நினைச்சுதான் பண்ணேன்" என்றவன், "கௌசி எதுவும் உன்ன தப்பா நினைக்கலல" என்று வினவினான்.

"அதெல்லாம் இல்லடா... ஆனா, கொஞ்சம் பயந்துட்டா, அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு தூங்க வச்சேன்" என்றான் விக்னேஷ்.

ஜீவா, "எவ்வளவு வயசாச்சு... ஆனா, இன்னும் நம்ம வியாஹா மாதிரிதான்டா விக்கி அவ"

"ஆமாடா" என்ற விக்னேஷின் உதட்டில் நிறைந்த புன்னகையை ஜீவா கவனிக்கத் தவறவில்லை.

பின் விக்னேஷ் கிளம்பி வெளியே வர அனைவரும் அமர்ந்து உண்டனர். "வரது தாத்தா எப்போ வருவாங்க?" என்று வியாஹா தன் அன்னை ஊட்டி விட்ட பணியாரத்தை முழுங்கியபடியே கேட்டாள்.

"ஆமாம் விக்கி... எப்போ டிஸ்சார்ஜ்?" என்று ஜீவா.

"இன்னும் ஒரு ஆறுநாள் தான்... அப்புறம் வரது தாத்தா வந்திருவார்" என்று வியாஹாவை பார்த்துச் சொன்ன விக்னேஷ், ஜீவாவைப் பார்த்து சிரித்தான்.
"இவன் என்ன ஏதோ வித்தியாசமாத் திரியறான்" என்று ஜீவா யோசிக்க பின் பேச்சுக்கள் மாறி வேறு திசையில் சென்றது.

"கௌசி கிளம்பு" என்றான் விக்னேஷ்.

"எங்கே?" என்று சாப்பிட்டு முடித்து வந்த கௌசி கையைத் துடைத்தபடியே கேட்டாள்.

"அதான் நம்ம ஸ்டூடியோக்கு... நீதான ஏதாச்சும் வேலைக்கு போகணும்ன்னு சொன்ன" என்றான்.

"ம்ம், சரி இரு... ஒரு பத்து நிமிஷம் ரெடி ஆகிட்டு வரேன்" என்ற கௌசி உள்ளே சென்றுவிட்டாள். சுமதியோ மதியம் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகவேண்டிய சாப்பாட்டை செய்ய சமையல் அறைக்குள் புகுந்தார்.
கௌசி அறைக்குள் நுழைந்த இரண்டு நிமிடத்தில் விக்னேஷும் அறைக்குள் நுழைந்தான். அப்போதே நுழைந்திருப்பான். ஆனால் ஜீவா, மதி எதாவது நினைப்பார்கள் என்றுதான் இரண்டு நிமிடம் கழித்து சென்றான். (இப்போ மட்டும் நினைக்க மாட்டாங்களா டா விக்கி)

ஜீவா விக்னேஷ் சென்ற திசையைப் பார்த்து விட்டுச் சிரிக்க, மதியோ ஜீவாவின் காதைப் பிடித்துத் திருகி, "அங்க என்ன பார்வை? ஏதோ நீங்க பண்ணாததை விக்னேஷ் பண்ணப் போற மாதிரி... அவங்களே என்ன நிலைமைல இருக்காங்களோ" என்று ஜீவாவின் மணையாள் காதைத் திருக, வியாஹாவும் சேர்ந்து கொண்டாள் அன்னையுடன் காதைத் திருகினாள்.

"அய்யோ! மை டூ பாப்பூஸ் விடுங்க" என்று விலகியவன் மதியின் அருகில் குனிந்து, "நல்ல நிலைமைதான் மதி... சர்வீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, தானா விக்னேஷ் ஸ்டார்ட் பண்ணிருவான் பாரு" என்று சொல்ல மகிழ்ச்சியில், 'அப்படியா?' என்று கண்களை விரித்த மதியின் அழகில் ஜீவாவின் விழுந்தான். கணவனின் பார்வையை உணர்ந்தவள் கணவனின் தலையில் நறுக்கெனக் கொட்டிவிட்டுப் போனாள்.

உள்ளே விக்னேஷோ கௌசியுடன் வாதாடிக் கொண்டு இருந்தான். "நான் கிளம்பிட்டேன்" என்று நின்றவளைப் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

"ஏய் என்னடி இது?" விக்னேஷ் எரிச்சலாக.

"ஏன்டா? இந்த சேரி நல்லா இல்லையா?" என்று தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்தபடி கேட்டாள்.

"அதில்லை... என்ன முகத்துல எதுவுமே இல்ல... அந்த டின்டின்னா போடுவேல்ல அது எங்க?" என்று வினவினான்.

"அது..." என்று கௌசி இழுக்க, "நீ உட்கார்" என்றவன், அனைத்தையும் எடுத்து வந்து அவள் முன் வைத்தான். முதலில் லிப்ஸ்டிகை எடுத்தவன் அவள் இதழ் நோக்கிக் குனிந்து பொறுமையாக அப்ளை செய்தான்.

கௌசி அவனையே கண்களைக் கூர்மையாக்கிப் பார்க்க, "ஏதோ கேக்கணும்ன்னு தோணுதுல்ல... கேளு" என்றான்.

"இல்ல... இதெல்லாம் பண்ணி விடறியே... என்ன புருசன் ஆகிட்டன்னு காட்றியா?" என்று கேட்டாள் உதடு வளைந்து நக்கலுடன்.

லிப்ஸ்டிகை அவள் உதட்டில் இருந்து எடுத்து அவளைப் பார்த்தவன், "ஆமா! ஆனா, இன்னொன்னு சேத்திக்கோ... நான் உன்னோட பழைய விக்காவா... நீ என்னோட பழைய கௌசிகா முழுதாக மாறுவதற்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றான் பொறுமையாக, அவள் கண்களைப் பார்த்து.

அவனது பதிலில் உறைந்து அவனையே சில நொடிகள் பார்த்தவள், "போதும் போதும்... நீ இவ்வளவு ஸ்பீடா லிப்ஸ்டிக் போட்டு விட்டா... நாளைக்கு தான் நம்ம ஸ்டியோ போவோம். நான் எல்லாம் பண்ணிக்கறேன்" என்றாள் கௌசி. பின் அவன் ரூமின் ஓரத்தில் நின்று கொண்டான்.

கௌசி ரெடி ஆகி, "ஓகே வா" என்றுத் திரும்பிக் கேட்க விக்னேஷ் முறைத்தான். "ஹம்ம்... இன்னும் என்ன அதான் எல்லாம் போட்டாச்சே" என்று கௌசி சொல்ல, விக்னேஷ் இடுங்கிய விழிகளுடன் கௌசியைப் பார்த்தான்.

திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தவள் மறுபடியும் திரும்பி விக்னேஷை பார்த்தாள். அவன் பார்வை பதிந்த இடத்தை உணர்ந்தவள் அந்த ட்ரெஸிங் டேபிள் முன்னாள் இருந்த குங்குமச் சிமிழைத் திறந்து குங்குமத்தை எடுத்து வகிடிட்டாள். ஏனோ கௌசிக்கு மனம் லேசாய் இருப்பதைப் போல இருந்தது. திரும்பி விக்னேஷைப் பார்க்க, "போலாம்" என்று புன்னகை சிந்தியவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த கௌசியைப் பார்த்த அனைவரும் தானாய் வாயைப் பிளந்தனர். வியாஹாவோ சித்தியின் அழகில் மயங்கி அவளிடம் ஓடினாள். "சித்தி... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இன்னிக்கு" என்றவள் தூக்கு என்பதுபோல கைகளைத் தூக்கிக் காட்ட கௌசி, வியா குட்டியைத் தூக்கினாள்.

"கண்டிப்பா தானா ஸ்டார்ட் ஆகிடும் ஜீவா" என்று மதி, தன் கணவன் ஜீவாவின் காதில் கிசுகிசத்தாள். பின் அனைவரும் கிளம்ப அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.
 
  • Love
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-22

ஒருவாரம் கடந்தது. வரதராஜன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழுநேர ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். விக்னேஷுடன் ஸ்டுடியோ சென்று வந்தாலும் தந்தையைக் கவனித்துக்கொள்ளத் தவறவில்லை கௌசிகா.

கடமையாக அல்லாமல் அக்கறையாக அவரை விழுந்து விழுந்து கவனித்தாள் கௌசி. சுமதியும், "ஏன் கௌசி அங்க வேலை செஞ்சிட்டு வந்துட்டு நீ இங்க செய்யணுமா... டயர்டா இருப்பல்ல விடு... நான் பாத்துக்கறேன்" என்று எவ்வளவு முறை சொல்லியும் அவள் கேட்கவில்லை.

கல்யாணமான அடுத்த தினத்தில் இருந்து விக்னேஷ் அறையிலேயே கௌசியும் தங்க ஆரம்பித்தாள். கல்யாணம் ஆன அடுத்த நாள் அறைக்குள் நுழைந்த விக்னேஷ், கௌசி அவனுக்கு முன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்தவன் உறங்க ஆரம்பித்தான்.

நள்ளிரவில் தன் மீது ஏதோ இருப்பதை உணர்ந்தவன் கண்களைத் திறக்க கௌசிதான் அவனைக் கட்டி இருந்தாள். கம்பத்தில் தனிக் கட்டிலில் படுப்பவள் எப்போதும் தலையணையைத் கட்டியபடியே தூங்கிய பழக்கம், தூக்கத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து விக்னேஷை தலையணையை என்று நினைத்து அணைக்க வைத்தது.

ஒரு நிமிடம் மூச்சடைத்தது விக்னேஷிற்கு. அவன் மட்டுமே உபயோகப்படுத்த வாங்கிய கட்டில் என்பதால் சற்று இடம் குறைவாகத்தான் இருந்தது. அதனால் அவனால் தள்ளியும் படுக்க முடியவில்லை. இனி தள்ளிப் படுத்தால் கீழேதான் விழவேண்டும் அவன். அவனைக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் கௌசி முகம் புதைத்திருக்க, அவளின் மூச்சுக்காற்று அவனின் கழுத்தில் பட்டு அவனை சித்தம் கலங்கச் செய்தது.

கைகளை இறுக மூடியவன் தன் இளமை உணர்வுகளுக்கு சங்கிலி போட்டு கட்டினான். கௌசி முன்னால் பட்ட கஷ்டம் கண்முன் வர அவன் உணர்வுகள் அடங்கியது உண்மைதான். பின் அவனுக்கு எங்கே தூக்கம் வரும். மூன்று மணி வரை விழித்தே கிடந்தான். மூன்று மணிக்குப் பிறகு கௌசி அவனை விட்டு தானாக விலக தூக்கம் அவன் கண்களைத் தழுவியது.

அடுத்தநாள் ஸ்டுடியோவில் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான் விக்னேஷ் கௌசிக்கு. கௌசியை மேற்பார்வை பார்க்க வைத்தவன் சில அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தந்தான். விக்ரமிடமும் சொல்லி வைத்திருந்தான். பிறகு ஆர்டர்ஸ் அன் ஆட்ஸ் வரும்போது எப்படி பேச வேண்டும், எந்த மாதிரிப் பேசினால் கஸ்டமர்ஸ்க்கு பிடிக்கும் என்று ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சொல்லித் தந்தான். எல்லாவற்றையும் சரியாகக் கேட்டு தலை ஆட்டினாள் கௌசி.

மேலும் ஸ்டுடியோவில் விக்ரமிடம் நல்ல நட்பு ஏற்பட்டது அவளுக்கு. விக்ரமிற்கும் கௌசியைப் பற்றி அரைகுறையாகத் தெரியும். அதுவும் மகாலிங்கம் அய்யா எப்போதோ சொன்னதை வைத்து. அவன் மேலே எதையும் கேட்டு ஆராயவில்லை. (நாட்டுல விக்ரம் மாதிரி பலபேர் இருந்துட்டா பிரச்சினையே இல்லைதான்)

"கௌசி... உள்ள போங்க" என்றான் விக்ரம் திடீரென. வேலையில் மூழ்கி இருந்தவள், 'இவனுக்கு என்ன ஆச்சு திடீரென' என்று விக்ரமைப் பார்க்க அவனோ கௌசியை,' உள்ளே போ' என்பதைப் போல சைகை செய்தான். சரி என்று ஆபிஸ் ரூம் உள்ளே சென்று உட்கார்ந்தவள் அங்கு இருந்த சில செய்தித்தாளைப் புரட்டினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் விக்ரம் நிற்பதைக் கண்டாள். "ஸாரி கௌசி... இப்போ வந்த அந்த நாய்(கஸ்டமர்) ஒரு மாதிரி, அவன் பார்வையே சரி இருக்காது... அதான்" என்றவன், "இப்போ வாங்க" என்று அழைத்தான்.

"அவன் அப்படி என்று உனக்கு..." என்ற கௌசி நிறுத்தி, "நீ வா போன்னே பேசு விக்ரம்" என்றாள். அவனின் பார்வையிலும் பேச்சிலும் இருந்த கண்ணியத்திலேயே அவளை அப்படிச் சொல்லச் செய்தது.

"அவன் அப்படி என்று உனக்கு எப்படித் தெரியும் விக்ரம்?" என்று பாதியில் விட்டக் கேள்வியைக் கேட்டாள்.

"அவன் என்னையவே ஒரு மாதிரி தான் பாக்கிறான்" என்று வெளிப்படையாக முணுமுணுக்க கௌசிக்கு சிரிப்பு வந்தது.

"என்ன உன்னையவா?" குறுஞ்சிரிப்புடன் கேட்டாள் கௌசி.

"அதான் பாரேன்... ஒரு பொண்ணு பாத்தாகூட நியாயம் இருக்கு" என்றான் கம்யூட்டரில் வேலை செய்தபடியே சிரிப்பு மாறாமல்.

"இல்ல கௌசி... அவன் பார்வை யாரையுமே சரியா பாக்காது..." என்றவன் அங்கு கூட்டிப் பெருக்க வந்த ஆயாவிடம், "ஆயா, இங்க வாங்களேன்" என்று அழைத்தவன்,"இப்போ ஒரு சொட்டையன் வந்துட்டுப் போனான்ல... அவன் எப்படி?" என்றுக் கேட்டான்.

"அந்தக் கட்டைல போறவனா? அவன் தலைல இடி விழுந்தா கூட வழுக்கி கீழ உழுந்துறும் தம்பி... அந்த தலைய வச்சிட்டு அவன் பாக்கற பார்வை இருக்கே யப்பே!" என்றவர், "அவன் கண்ணுல கொள்ளிய வைக்க" என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு போனார்.

அந்த ஆயா நகர்ந்த பின் விக்ரமும் கௌசியும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். "பாத்தியா... நம்ம ஆயாவை கூட விட மாட்டேங்கிறான்" என்று சொல்ல இருவரும் சிரித்தபடியே வேலையைச் செய்து முடித்தனர்.

வெளி வேலையை முடித்துக் கொண்டு விக்னேஷ் வர, "வா... சாப்பிடலாம்" என்று அழைத்தாள் கௌசி எதையோ தேடியபடி.

விக்னேஷ், "இல்லடி... வெளில இன்னொரு வேலை இருக்கு"

கௌசிகா, "பத்தே நிமிஷத்துல என்ன ஆயிடப்போகுது"

விக்னேஷ், "அட, நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்"

"மணி இப்பவே ரெண்டரைடா" என்று சொல்ல விக்னேஷிடம் பதில் இல்லை. கௌசிக்குக் கோபம் வந்தது.

"இப்போ நீ வரப்போறியா இல்லையா?" கௌசி குதிக்காதக் குறையாகக் கேட்க,
"அம்மா தாயே... போய் எடுத்து வைடி... வரேன்" என்றவன் கையைக் கழுவச் சென்றான்.

பின் அவன் வர பரிமாறினாள். "நீ சாப்பிட்டியா?" என்று விக்னேஷ் கேட்க, "ம்ம்" என்பது போலத் தலை ஆட்டினாள். அதற்குள் ஏதோ ஃபைல் எடுக்க உள்ளே நுழைந்த விக்ரம், விக்னேஷைக் கண்டு, "என்னடா அதிசயமா இருக்கு... சாப்பிடலாம் செய்யறே" என்றான். கௌசிக்கு, 'இந்த விக்ரம் என்ன கேனத்தனமா பேசறான். ஒரு மனுஷன் சாப்பிடத்தானே செய்வான்' என்று நினைத்தாள்.

விக்னேஷிடம் கேள்வியை வீசிவிட்டு கௌசியிடம் திரும்பிய விக்ரம், "இந்த மாதிரி டெய்லியும் பண்ணு கௌசி... மதியம் வேலை வேலை என்று சாப்பிடவே மாட்டான். இந்த மாதிரி பிடித்து வைத்துக்கொள் இவனை" என்று தன் பேச்சை முடித்தவன் ஃபைலை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் போன பின் கௌசி பொரிந்து தள்ளிவிட்டாள் விக்னேஷை. "உனக்கு எங்கு இருந்து இத்தனை பழக்கம் வந்தது. சிகரெட் ஒரு நாளைக்கு பத்துக்கு மேல போகுதுன்னு பாத்தா, மதியமும் சாப்பிடறதில்லை போல... அப்படி சாப்பிடாமல் சம்பாதித்து என்ன செய்ய போறே நீ? இனிமேல் இதை எல்லாம் விடற வழியைப் பார்" என்று திட்டிக் கொண்டே வேலைகளை விக்னேஷ் எதிரில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தாள். தன் எதிரில் இருப்பவளையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவன் எழுந்து கையைக் கழுவச் சென்றான்.

கைகளைக் கழுவி வந்தவன் தான் சாப்பிட்ட தட்டை எடுத்து வைக்க, "நான் எடுத்து வச்சிடறேன்... நீ போ" என்று கௌசி வர,

அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன், "நீ என் மனைவிதான் இல்லைன்னு சொல்லல... ஆனா, இந்த வேலை எல்லாம், அதாவது நான் சாப்பிட்ட பாக்சை நீ எடுக்கிறது எல்லாம் வேண்டாம்டி... நான் சாப்பிட்ட பாக்சை நானே எடுப்பேன்" என்று சொல்லிவிட்டுப் போக கௌசிக்கு பெருமிதமாக இருந்தது.

காலம் மாறினாலும் நம் ஆண்கள் அப்படியே நிற்பதை அவள் கண்டு இருக்கிறாள். ஏன் அவள் பார்த்தவரை சிலர் இந்த மாதிரி சொல்லி அவள் பார்த்ததில்லையே. பெண்கள் தனக்கு சமமாக வந்திடக் கூடாது என்று நினைக்கும் முட்டாள்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள். அதில் விக்னேஷ் தன்னை இங்கு கூட்டி வந்து எல்லாம் கற்றுத் தருவது என எல்லாம் அவளை பெருமை அடையச் செய்தது. அன்று அவளின் மனதில் புதைந்திருந்த காதல் எழ, துளிர் விட ஆரம்பித்தது.

அவள் சிந்தனையில் இருக்கும்போதே உள்ளே வந்த விக்னேஷ், "கௌசி..." என்று அழைத்தான்.

"சொல்லுடா..." என்று திரும்பினாள்.

"அடுத்தவாரம் ஒரு எம்எல்ஏ வீட்டுக் கல்யாணம் இருக்கு... ஸோ நீ போய் எல்லாம் கவனிச்சுக்க" என்றான் விக்னேஷ் சாதாரணமாக.

"நானா?" என்றாள் விழியை விரித்து.

"ஆமா, நீதான்" என்றான் தன் பைக் சாவியை எடுத்தபடி.

"எனக்கு எதுவுமே தெரியாதுடா... எம்எல்ஏ வீட்டுக் கல்யாணம் வேற... நான் வேற மேரேஜுக்கு போயிக்கிறேனே" என்று கௌசி சொன்னாள்.

"நான் காலைல சொன்ன மாதிரி பண்ணு... அதுவும் இல்லாமல் விக்ரம் உன்கூட வருவான்" என்றான் விக்னேஷ்.

"டேய்ய்... ஆனா" என்று கௌசி ஆரம்பிக்க விக்னேஷ் உள்ளே புகுந்தவன், "மிஸஸ்கௌசிகா. நான் உங்க முதலாளி... நான் சொல்றத செய்றது தான் உங்க வேலை" என்று விக்னேஷ் முறுக்கிக் கொண்டு சொன்னான்.

விடுவாளா நம்ம புள்ள,"சரிங்க முதலாளி ஸார்" என்றவள் அவனை மிஞ்சிய முறுக்கலோடு அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் தனக்குள்ளேயே விக்னேஷைத் திட்டினாள்.

வெளியே வந்த விக்னேஷ், "விக்ரம் நான் கிளம்பறேன் அந்த துணிக்கடை ஆட் விஷயமா" என்றவன் கௌசியை ஓரக்கண்ணால் பார்த்து, "விக்ரம் சிலரைத் திட்ட வேண்டாம் என்று சொல்லு... பொறை ஏறுது எனக்கு" என்றுவிட்டு போய்விட்டான். ஆனால், விக்ரம்தான் இவன் என்ன சொல்றான் யாரைச் சொல்றான் என்று 'பேபே' வென விழித்தான்.

அவன் போன திசையைப் பார்த்தவள், "திமிரு புடிச்சது" என்று மனதுக்குள் முணுமுணுத்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய இருவருக்கும் சுமதி டீயையும் வாழைக்காய் பஜ்ஜியையும் தந்தார்.(ஆஹா! கோயம்பத்தூர் மாலை... அதுவும் கிணத்துக்கடவு... டீ... பஜ்ஜி... சொர்க்கம் தான்). வரதராஜன் வர அவரும் சேர்ந்து கொண்டு கலகலப்பாகச் சென்றது.

இரவு அறைக்குள் நுழைந்த விக்னேஷ் தலையணையை எடுத்துக் கீழே போட கௌசி முறைத்தாள். "உனக்கு என்னடா பிரச்சனை?" என்று சண்டைக்கு வந்தாள்.

"எனக்கா? எனக்கு என்ன? ஏன்டி சண்டைக்கு இழுக்கற என்னை?" விக்னேஷ்.

"நான்தான் அந்தக் கல்யாணத்திற்குப் போறேன்னு சொல்லிட்டேன்ல... அப்புறம் ஏன் தலையணையை எடுத்துக் கீழே போடறே? நேத்து மாதிரியே நீ இப்படி... நான் இப்படி படுத்துக்கலாம்ல" என்றாள் கௌசி நேற்று நடந்தது எதுவும் தெரியாமல்.

"ஆமா, நீ போறேன்னு சொல்லிட்டே... நான் எதுவும் சொல்லலியேடி உன்னை... நான் கீழே படுக்கிறது வேற ரீசன் இருக்கு" என்றான் முகத்தை திருப்பியபடி.

"அப்படி என்ன ரீசன்... சொல்லு கேப்போம்" என்று கௌசி இடுப்பில் கை கொடுத்துக் கேட்க, முதலில் தயங்கியவன் பின் அவளின் நக்கலைக் கண்டு, 'உன்னை' என்று பல்லைக் கடித்தவன் மேலே சொன்னான்.

"அதாவதுங்க மேடம்... என் மாமன் மகள் நைட் தூங்கும்போது மேல கை போட்டுக் கட்டிப் புடிச்சிக்கறா... என்னால தூங்கவே முடியல அதான்" என்று விக்னேஷ் சீரியஸ் ரியாக்ஷனில் சொல்ல கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. (வெட்கமா?? இல்ல அடச்சை இப்படி பண்ணிட்டோமேனா?)

ஒரு நிமிடம் தடுமாறியவள், "இல்... இல்ல.. நா... நான்... தலையணை என்று நினைத்து... இது... கம்பத்தில் வந்த பழக்கம்" என்று கௌசி பிச்சு பிச்சு சொன்னாள்.

"ஹே! கூல்டி" என்ற விக்னேஷ், "எனக்கு டிஸ்டர்ப் எல்லாம் இல்ல... நீ ஃப்ரீயா படு... அதுக்குதான்" என்றான் விக்னேஷ். (அஹான்... நல்ல கதை விடுடா... அதுக்கெல்லாம் இல்லை... கௌசி பக்கத்தில் இருந்தால் பையன் சித்தம் கலங்குது அதான்)

"இல்லடா நான் வேணா கீழே படுத்துக்கிறேன் நீ மேல படு" என்றாள் கௌசி.

விக்னேஷ், "உன்ன கீழே படுக்க வச்சிட்டு... நான் ஹாயா மேலேயா... நோ டி"

"அப்போ நான் மட்டும் ஹாயா தூங்கறதா?" கௌசி கேட்க, "இப்போ என்ன தான்டி பண்ணனும் உனக்கு?" என்றுக் கேட்டான்.

"பேசாம நடுவுல பில்லோவை வச்சிடலாம்... நான் புடிச்சாக்கூட அதைப் புடிச்சுப்பேன்ல" என்று சொல்ல இருவரும் இரண்டு தலையணையை நடுவில் அடுக்கினர். (வாவ் வாட் எ அறிவாளி கப்பில்ஸ்)

வெறும் தலையணை இருவருக்கும் ஏற்பட்டு கொண்டிருக்கும் காதல் ஈர்ப்பபை நிறுத்திவிடுமா என்ன?

நாட்கள் செல்ல அந்த எம்எல்ஏ வீட்டுக் கல்யாணமும் வந்தது. அன்று காலை அதற்குக் கிளம்பிய கௌசி தலையை சீவிக் கொண்டு இருந்தாள். நீளமான அடர்நீல அனார்கலி அவளை ஜொலிக்க வைத்தது. தலையை சீவி முடித்து, நெற்றிக்கு வகிடிட்டு திரும்ப, விக்னேஷ் பெட்டில் இருந்தபடியே கையை தலைக்கு ஊன்றி அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். இல்லை இல்லை அவளை சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.

"ஓகே வாடா" என்று துப்பட்டாவை ஒரு பக்கமாகப் போட்டு அட்ஜஸ்ட் செய்தபடி கேட்டாள் கௌசிகா.

"ஏன்டி... சேரி கட்ட மாட்டியா? இல்லை கட்ட தெரியாதா?" என்று கேட்டான். அவன் கேள்வியில் நிமிர்ந்தவள் அவன் முகத்தில் இருந்த நக்கலைக் கண்டு அவனுக்குப் பதில் அளித்தாள்.

"அதெல்லாம் கட்ட முடியாது... எனக்கு இதான் புடிச்சிருக்கு" என்றவள், "நீ சீக்கிரம் கிளம்புடா... அப்போதான் அங்க போக முடியும். இப்போ காலையிலேயே போனாதான் லோகேஷன் எல்லாம் மண்டபத்துல பாத்துட்டு, எல்லாம் செட் பண்ண முடியும்ன்னு விக்ரம் சொன்னான்" என்றவள் தனக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வைத்தாள்.

"நானெல்லாம் அரைமணி நேரத்தில் கிளம்பிடுவேன்" என்று விக்னேஷ் பெருமை அடிக்க, "சரி, சரி... நல்லா தேச்சு குளிச்சிட்டுவா. டைம் போகுதுன்னு தண்ணி ஊத்திட்டு வந்திடாதே" என்று கிண்டலடித்தவள் அவன் திரும்புவதற்குள் அறையைவிட்டு வெளியேறி தப்பித்தாள்.

பின் விக்னேஷ் கிளம்பி வர இருவரும் ஸ்டுடியோவிற்குக் கிளம்பினர். கௌசி அடுத்தநாள் வரை உடுத்த வேண்டிய உடமைகளோடு அனைத்தும் எடுத்திருந்தாள்.

அங்கிருந்து ஒரு டீமே கிளம்ப கௌசியிடம் வந்த விக்னேஷ், "நீ இன்னிக்கு தைரியமா போடி... விக்ரம்கிட்ட சொல்லியிருக்கேன், அவன் பார்த்துப்பான். நீயும் எல்லாம் எப்படின்னு பாத்துக்க... இன்னிக்கு நைட் உனக்கு அங்கயே தங்க ஏற்பாடு, மண்டபத்துலையே தனி ரூம் தந்திருவாங்க... உனக்கு புடிக்கலைனா சொல்லு நான் வரேன், பக்கத்துல ரூம் ஏதாவது போட்டுக்கலாம். எப்படியும் நான் காலைல வரதுதான்" என்று நீளமாகப் பேசியவனை கண் இமைக்காமல் பார்த்தாள் கௌசி. அவளுக்குத் தெரியவில்லை அவள் கொஞ்சம் கொஞ்சமாக விக்னேஷிடம் தன் காதல் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதை.

"என்னடி? ஏன் இப்படி நிக்கற?" என்று அவளின் பார்வையில் தோளைத் தட்டிக் கேட்டான்.

"ஒன்னும் இல்லடா..." என்றவளிடம் விக்னேஷ் தன் இதழால் அவள் நெற்றியில் முத்திரையைப் பதித்து, "எல்லாம் போக போக சரி ஆயிடும் கௌசி" என்றான் அவள் கையைத் தன் கைக்குள் வைத்து.

அதற்குள் அங்கு வந்த விக்ரம், "டேய் டேய் இங்க அஞ்சு கிலோ மீட்டர் பக்கத்துல இருக்க மண்டபத்துக்கு, விட்டா அஞ்சு மணி நேரம் பேசுவே போல நீ" என்று கிண்டல் செய்தான்.

"என் பொண்டாட்டிகிட்ட நான் பேசுவேன்... உனக்கு என்னடா?" என்று விக்னேஷ் விக்ரமின் பின் கழுத்தைப் பிடித்தான்.

"சரி என் கழுத்த விடு... எங்காவது ஒடஞ்சிருச்சுன்னா அப்புறம் வரப் போற பொண்டாட்டி கிட்ட உன்ன மாதிரி குனிஞ்சு நெத்தில முத்தம் குடுத்து கொஞ்ச முடியாது" என்று சீரியஸான முகத்துடன் பேச, விக்னேஷிற்கு வெட்கம் வந்து விக்ரமை கட்டிப் பிடித்தான். "என்னைய ஏன்டா கட்டி புடிக்கற..." என்று தள்ளி விட்டவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

கல்யாண மண்டபத்திற்குச் சென்று இறங்க, எல்லோரும் தேவையான எல்லாவற்றையும் கீழே இறக்கினர். விக்ரமும் கௌசியும் சென்று மண்டபத்தைச் சுற்றி எங்கெங்கே கேமரா வைக்க வேண்டும், எங்கெல்லாம் பெண் மாப்பிள்ளையை தனியாக ஃபோட்டோஸ் எடுக்க வேண்டும் என எல்லாவற்றையும் முடிவு செய்தனர்.

ஈவ்னிங் ரிசப்ஷன் ஆரம்பிக்க எல்லோரும் பரபரப்புடன் இயங்க ஆரம்பித்தனர். எம்எல்ஏ வீட்டுக் கல்யாணம் என்பதால் அதற்குத் தகுந்த பிரம்மாண்டமும் பணக்காரத் தன்மையும் இருந்தது. கௌசியும் விக்ரமும் எல்லாவற்றையும் பார்வையிட்டபடியே வந்தனர். வரவேற்பில் இரண்டு கேமராஸ், வீடியோஸ், உள்ளே நான்கு பக்கங்களிலும் கேமராஸ் அன்ட் வீடியோஸ், மேலும் இரண்டு ட்ரோன் கேமரா பறந்து கொண்டு இருத்தது. எல்லாம் நல்லபடியாகவே சென்றது.

மணி பதினொன்று ஆகியும் கூட்டம் குறையவில்லை. தன் ஃபோனின் சத்தம் கேட்டு எடுத்த கௌசி திரையில், 'விக்கா' என்ற பெயரைப் பார்த்து அட்டென்ட் செய்து காதில் வைத்தபடியே வெளியே வந்தாள். கூட்ட நெரிசலில் சிக்கி எப்படியோ வெளியே வந்தவள், "சொல்லுடா" என்றாள்.

"என்ன கௌசி? எப்படிப் போகுது எல்லாம்" என்று வினவினான் விக்னேஷ்,"குட் டா... சாப்பிட்டியா?" என்று கேட்டாள்.

"இல்லடி நீ?" என்று அவன் வினவ, "நீ ஏன் இன்னும் சாப்பிடல" என்று கௌசி அதட்டினாள்.

"எல்லாம் உன்கூட உட்கார்ந்து சேர்ந்து சாப்பிடத்தான்" என்று காதின் அருகில் கேட்ட விக்னேஷின் குரலில் கௌசி அவசரமாகத் திரும்பினாள்.

திரும்பியவள் அவன் மேலே இடித்து நிற்க, "நீ எங்கடா இங்கே?" அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் வாய் பிளந்தாள்.

"உன்ன தனியாவிட முடியலடி... அதான்" என்றவன் கௌசியின் கைகளை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ரிசப்ஷன் முடிந்த பின்தான் விக்ரம், கௌசி, விக்னேஷ் மற்றும் உடன் வந்த படை என அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டனர். கௌசிக்கு காலை வந்த போதே எம்எல்ஏ வின் மச்சான் அவள் தங்கும் அறையைக் காண்பித்திருந்தார். அனைவரும் கலைய விக்னேஷ் சென்று தன் உடைகளை எடுத்து வந்தான்.
(காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் முகூர்த்தம் என்பதாலே இரவு அங்கு தங்க ஏற்பாடு)

கௌசியும் விக்னேஷும் சென்று அந்த அறைக்குள் முடங்க இருவருமே அலுப்பில் சீக்கிரம் உறக்கத்தைத் தழுவினர்.

அடுத்த நாள் நடக்கப்போவதை அறியாமல் இருவருமே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
 
  • Love
Reactions: Malar