மறையாதே என் கனவே-25,26 (FINAL)

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-25

வழக்கம் போல ஆபிஸில் வேலைகளைச் செய்த கௌசிகா, எழுந்து விக்னேஷின் அறைக்குச் சென்றாள்.

"விக்கா... அந்த எம்எல்ஏ வீட்டுக் கல்யாணம் வீடியோஸ் ரெடி, பட் போட்டோ இன்னும் நாலுநாள் ஆகிவிடும்டா... நீ யார்கிட்ட சொல்லணுமோ சொல்லிடு" என்றாள்.

விக்னேஷ், "ம்ம்" கதவு தட்டும் ஓசைக் கேக்க, "எஸ்..." என்றான்.

உள்ளே வந்த விக்ரம், "விக்னேஷ், யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்காருடா. ஏதோ தனியா பேசணுமாம்" என்று விக்ரம் சொல்ல விக்னேஷ், "பெயர் என்ன?" என்று வினவினான்.

விக்ரம், "ஏதோ தேவராஜ்னு சொன்னார்"

"தேவராஜா...?" என்று புருவம் சுருக்கிய விக்னேஷ், "அப்படி யாரும் எனக்குத்..." என்று முடிப்பதற்குள் கௌசி இடையில் புகுந்தாள்.

"விக்கா... குருவோட அப்பா" என்றாள் இறுகிய முகத்துடன்.

கௌசியின் முகத்தைவிட விக்னேஷின் முகம் இரண்டு மடங்கு இறுகியது.
விக்ரமைப் பார்த்தவன், "சரி, போய் வரச் சொல்லு" என்றான்.

அவர் உள்ளே வர கௌசி அப்போதுதான் அவரின் தோற்றத்தைக் கவனித்தாள். மகனின் இறப்போ என்னமோ தெரியவில்லை, அவரின் முகத்தில் உயிர்ப்பே இல்லை. கொஞ்சம் சோர்வாகவும் தெரிந்தார்.

வந்தவரை, "வாங்க" என்று அழைத்த விக்னேஷ், "உட்காருங்க சார்" என்றான்.
அவர்களது அழைப்பை ஏற்று தேவராஜ் உட்கார மூவருமே எதுவும் பேசவில்லை. கையில் ஏதோ பேக்கை வைத்திருந்த தேவராஜ் அதைப் பார்த்தபடியே உட்கார்ந்து இருந்தார்.

கௌசிக்குமே தர்ம சங்கடமாக இருந்தது. ஒருவேளை விக்னேஷிடம் தனியாக ஏதாவது பேச வேண்டுமோ என்று எண்ணிய கௌசி, "நான் வெளியே இருக்கேன்" என்று நகரப் பார்க்க, "இல்லமா நீ நில்லு" என்றார் தேவராஜ்.

விக்னேஷும் கண்களைக் காட்ட விக்னேஷ் அருகிலேயே ஒரு சேரை போட்டு உட்கார்ந்தாள் கௌசிகா. "கொஞ்சநாள் முன்னாடி உங்கள எம்எல்ஏ வீட்டு கல்யாணத்துல பார்த்ததா என் மாப்பிள்ளை உதய்குமார் சொன்னார்"
கௌசியைப் பார்த்தவர், "கல்யாணம் ஆயிருச்சாடா?" எனக் கேட்டார்.

கௌசி, "ஆமா, அங்கிள்"

"தெரியும்டா" என்று தேவராஜ் சொல்ல, கௌசியும் விக்னேஷும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்த்தனர். இருவரின் மனதிலும், தெரிந்து கொண்டே ஏன் கேட்டார் கேள்வியை என்று இருந்தது.

"நான் ஒரு விஷயமாகதான் வந்தேன்" என்றவர், "கொஞ்ச நாள் முன்னாடி நடந்த எம்எல்ஏ வீட்டு கல்யாணத்துல உன்னைப் பார்த்ததா அங்கு வந்திருந்த உதய்குமார் (குருவுடைய அக்கா வினித்ராவின் கணவன்) சொன்னார். அதுக்கு அப்புறம் நான் விசாரிச்சபோது தான் உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சது. ரொம்ப சந்தோஷம்" என்றவரின் கண்கள் கலங்கின.

"சார், எமோஷன் ஆகாதீங்க" என்ற விக்னேஷ் விக்ரமைக் கூப்பிட்டு மூன்று ஜூஸ் கொண்டு வரச்சொன்னான்.

"என் மகனுக்குத்தான் இந்த மாதிரி ஒரு பெண்ணை வைத்து வாழக் குடுத்து வைக்கல" என்றவர் விக்னேஷை பார்த்து, "ஸாரி தம்பி... உங்க முன்னாடி சொல்றேன்னு நினைக்காதீங்க... அதானே உண்மை" என்றார்.

"அதெல்லாம் இல்ல சார், மனசுல பட்டதை சொன்னீங்க... அவ்வளவு தானே விடுங்க" என்றான்.

கௌசி எதுவும் பேசவில்லை. அவரைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். அதற்கு என்று கோபமாகவோ அல்லது முறைத்துக் கொண்டும் நிற்கவில்லை. விக்ரம் வந்து ஜூஸை வைத்து விட்டு போனான்.

"கௌசி எங்க வீட்டில் இருந்து வந்தப்போ அவளுக்கு போட்ட நகையை விட்டுட்டே வந்திருச்சுபா.... ரொம்ப நாளா அதை வச்சிருந்தேன். நீங்களும் எங்கன்னு தெரியல... அதான், இப்போ கொண்டு வந்தேன்" என்று ஒரு பையில் போட்டு எடுத்து வந்த ஐம்பதுபவுன் நகையை டேபிள் மேல் வைத்தார்.

"இது எதுக்கு அங்கிள்..." என்று கௌசி ஆரம்பிக்க, விக்னேஷ் அளித்த பதில் அவளுக்குக் கோபத்தைக் கிளப்பியது. "சரி, அங்கிள்" என்றான் அவன்.

"அங்கிள், இதெல்லாம் வேண்டாம் அங்கிள்... எடுத்துட்டு போயிடுங்க" என்று கௌசி சொல்ல,

"இது நான் எடுத்துட்டுப் போக என்னுடைய நகை இல்லையேமா... உனக்கு வந்து சேரவேண்டிய பணத்தையும் நீயும் உன் அப்பாவும் மறுத்துட்டீங்க... சரி அது உங்க இஷ்டம். ஆனால், இது எங்களுடையது இல்லையே" என்றார் தெளிவாக.

"அங்கிள், ஜூஸ் எடுத்துக்கங்க ப்ளீஸ் " என்று விக்னேஷ் சொல்ல ஜூஸை குடித்தவர், "தம்பி கௌசிகாவை நல்லாப் பாத்துக்கங்க... என் மகனால ரொம்ப கஷ்டத்த பாத்திருச்சு" என்று சொல்ல விக்னேஷ் கௌசி இருவருமே அவரை யோசனையாகப் பார்த்தனர்.

"குரு இறந்த அன்று கௌசி மயக்கம் போட்டு விழுந்தப்ப டாக்டர் பரிசோதித்தார். அப்போ கௌசியின் கையில இருந்த காயத்தை வச்சே சொல்லிட்டார்" என்று அவர் சங்கடமாகச் சொல்ல, விக்னேஷ், கௌசி இருவருமே பேசவில்லை.

ஒரு நொடி கடந்து வாயைத் திறந்தான் விக்னேஷ். "உங்க மகன் உயிரோடு இருந்து, நடந்தது எல்லாம் தெரிந்திருந்தா அவனுடைய சாவு என் கையிலதான் சார்... அதுல மாற்றம் இல்லை சார். ஆனா, இப்போ கூட செத்தவனைத் தோண்டி எடுத்து அடிக்கணும்கிற அளவு கொலை வெறி இருக்கு எனக்கு" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு பேசினான் விக்னேஷ்.

"இப்படி பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க... மனசுல இருக்கிறதை சொல்றதுல்ல தப்பு இல்லையே? ஆனா, கௌசியை எந்தக் குறையும் கஷ்டமும் இல்லாமல் நான் வச்சிருப்பேன். அது கடமை மட்டும் இல்ல.. என்னோட விருப்பமும் அதான்" என்றான் விக்னேஷ் உறுதியானக் குரலோடு.

ஜூஸை குடித்து முடித்துவிட்டு எழுந்த தேவராஜ், "ரொம்ப நிம்மதியாக இருக்குமா... நீ இனி நல்லா இருப்பே" என்றவர், "வர்றேன் தம்பி" என்று கிளம்பி விட்டார்.

அவர் போன பின் விக்னேஷிடம் திரும்பிய கௌசி தன் கோபத்தைக் காட்டினாள். "நானே, இந்த நகை வேண்டாம்னு சொல்றேன்... நீ சரின்னு அவர்கிட்ட சொல்றே" என்று பாய்ந்தாள்.

"ஏன், அதுல என்ன தப்பு இருக்கு?" என்றான் விக்னேஷ்.

"என்ன தப்பா... இப்போ அந்த நகைய வச்சிட்டு நீ என்ன பண்ணப் போற சொல்லு?" என்றவளைக் கேள்வியாய் பார்த்தான்.

"எனக்கு இந்த நகையே வேண்டாம்டா" என்று கௌசி சொல்ல, விக்னேஷ் அவளை முறைத்தான்.

"பேசி முடிச்சிட்டியா? நான் பேசலாமா?" என்று கேட்ட விக்னேஷ் மேலே தொடர்ந்தான்.

"இந்த நகை வேண்டாம் என்று சொல்ல உனக்கு உரிமை இல்ல கௌசி..." என்றான் அழுத்தமாக.

"நீயே இந்த நகையை போட ஆசைப்பட்டாலும் நான் விடமாட்டேன். இது எனக்கும் இல்லை உனக்கும் இல்லை, இதை நாம மாமாக்கிட்ட கொடுக்கப் போறோம். இந்த நகை முழுக்கமுழுக்க அவருடைய உழைப்பு, இதை அவருகிட்ட தந்திடலாம்... அதுக்கு அப்புறம் அவருக்கு என்ன தோனுதோ பண்ணட்டும்" என்றவன், "அப்புறம் இன்னொன்னு... அந்த நகையை மாமா உனக்கே குடுத்தாலும் நீ வாங்கக்கூடாது. இது நான் குடுக்குற அட்வைஸ் இல்ல... புருஷனா சொல்ற ஆர்டர்" என்றான் அழுத்தமாக.

கௌசி அப்படியே நின்று அவனைப் பார்க்க, "என் பொண்டாட்டிக்கு நான் என் கையால என் பணத்துல நகை போடுவேன், என்னால கண்டிப்பா போட முடியும். உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கு தானே?" என்று தன் இருக்கையில் தலைக்குக் கை கொடுத்து பின்னால் சாய்ந்து கேட்க, கௌசி அவனது பேச்சில் தன்னை இழந்தாள்.

ஏற்கனவே அவன் தேவராஜிடம் பேசியதில் அதிசயத்து இருந்தாள். முதலில் அவன் அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டது, பின் அவருக்கு பதில் அளித்தது, குருவைப் பற்றிப் பேசும்போது அவன் கண்களில் பிரதிபலித்த கோபம் என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால், அவன் நகையை வாங்கிக் கொண்டான் என்ற கோபத்தில் அதை அவள் முதலில் யோசிக்கவில்லை. இப்போது அவன் எதற்கு சொன்னான் என்று தெரியும் போது அவனிடம் தன்னை முழுதாக இழந்தாள் கௌசிகா.

"என்ன, என் மூஞ்சில ஏதாவது இருக்கா? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம பாத்துட்டே இருக்க?" என்ற விக்னேஷின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் அளித்த பதில் அவனை சந்தோஷம் அடையச் செய்தது.

"நான், என் புருஷனை நம்பாமல் வேறு யாரை நம்ப போறேன்? அவன் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்" என்றாள் கௌசி.

அவளின் பேச்சில் விக்னேஷ் வாய் அடைத்துப் போனான். இரண்டாவது முறையாக அவள், 'என் புருஷன்' என்று சொன்னது அவனுக்கு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் சந்தோஷத்தில் சுற்றினான்.

ஆனால், அவனைத் தப்பாக நினைத்ததிற்குத் தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள். "ஸாரி" என்று முணுமுணுத்தவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஆனால், அதை கேட்கும் நிலையில் விக்னேஷ் இல்லையே. அவனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. வெளியே வந்து தனியே நின்றவளுக்கு விக்னேஷின் காதல் புரிந்தது. அவன் தன்மேல் வைத்திருக்கும் அன்பும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

இப்படித் தன்னை நேசிப்பவனிடம் இன்னும் இவனுக்கு எப்போதில் இருந்து நம்மேல் காதல் என்று யோசித்து விலகி இருப்பது மடத்தனம் என்று நினைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

செல்லும் வழியில் விக்னேஷ் ஏதேதோ பேசிக் கொண்டு வர கிணத்துக்கடவு வந்தவுடன், "வண்டிய நிறுத்து" என்றாள் கௌசி.

"என்ன?" விக்னேஷ் யோசனையாக.

"வண்டிய நிறுத்துடா" கௌசி அமைதியான குரலில்.

விக்னேஷ் யோசனையாக வண்டியை நிறுத்த அவன் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் கௌசி. அவன் சட்டைக் காலரை பிடித்து அருகில் இழுத்தவள் அவன் கன்னம், நெற்றி, கண் என முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவளது காதல் உணர்வை அவளால் அடக்கவே முடியவில்லை.

இப்போதே அவனை முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் அவளை அப்படிச் செய்ய வைத்தது. அவளது இந்த செய்கையில் முதல் முத்தத்தில் அதிர்ந்தவன் பின் அந்த ரோட்டில் தங்களைத் தவிர ஆள் யாரும் இல்லை என்று கண்களைச் சுழற்றி பார்த்த பிறகு அவளின் முத்தத்தை முழுதாக அனுபவித்தான்.

அவன் அவள் இதழ் நோக்கிக் குனிய முதலில் அதை ஏற்க நினைத்தவள் பின் அவனைத் தள்ளி விட்டாள். "சிகரெட் குடிச்சிருக்கியாடா?" என்று முகத்தைச் சுளித்தவள், "எருமை..." அவன் தோளில் அடித்து கிள்ளி வைத்தாள்.

அவனை விட்டவள், "காரை எடு" என்றாள் அவன் கண்களைப் பார்த்து. ஏனோ அவளின் இந்த செய்கையில் நெகிழ்ந்தாலும் அடுத்த கட்டத்திற்கு ஏங்கியவன் அதை செயல்படுத்த தயங்கினான். வாங்கின அடியே போதும் என்று எண்ணினான்.

இருவரும் வீட்டை அடைய சுமதி கோயிலிற்குச் சென்றிருந்தார். வரதராஜன் ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். விக்னேஷ் பசியை உணர, "கௌசி, பசிக்குதுடி... ஏதாவது செய்யேன்" என்றான் வயிற்றைத் தொட்டபடி. (நீயெல்லாம் சிங்கிளா இருந்திருக்கலாம்டா டேய்... உன்னைய வச்சிக்கிட்டு யப்பாபா)

'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது ஏதாவது இவனுக்கு ஞாபகம் இருக்கா பாரு' என்று நினைத்த கௌசி, "மரமண்ட மரமண்ட" என்று முணுமுணுத்துக் கொண்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு சேலையைக் கூட மாற்றாமல் சமையல் அறைக்குள் புகுந்தாள்.

அவள் சமையல் அறைக்குள் நுழைந்த பின் பாத்ரூமிற்குள் புகுந்த விக்னேஷ் ப்ரஷை எடுத்து பல்லை விலக்கினான். பல்லை விலக்கி மௌத்வாஷ் ஊற்றி வாயைக் கொப்பளித்தவன், சிகரெட் நெடி வருகிறாதா என்று வாயின் முன் கையை வைத்து ஊதிப் பார்த்தான். பின் சிகரெட் நெடி இல்லாததை உணர்ந்தவன் ஹாலிற்கு வந்து டிவியை போட்டான்.

"விக்கா..." என்று கௌசி கூப்பிடும் குரல் கேட்டு, ‘இப்போ இவளுக்கு என்னவாம்’ என்று நினைத்தவன் சமையலறைக்குச் சென்றான். அங்கே அவள் பெரிய ப்ளான் ஒன்றைப் போட்டிருந்தாள்.

"என்னடி?"

"என்னைத் தூக்கு" கௌசி சாதாரணமானக் குரலில்.

"எது?" விக்னேஷ் அதிர்ந்த குரலில்.

"என்னைத் தூக்குடா... மேல கரம் மசாலா எடுக்கணும்" என்றாள்.

"கௌசி, நான் வேணா ஏறி எடுத்துத் தரட்டுமா?" என்றான் தயங்கியபடி.

"இங்க பாரு, இங்க வச்சிருக்க சின்ன டப்பால தீர்ந்திருச்சு... மேல பெரிய டப்பால இருந்து எடுக்கணும். உனக்கு கரம் மசாலாக்கும் மத்த மாசலாக்கும் வித்தியாசம் தெரியுமா?" என்று செக்மேட் வைத்தாள்.

"ஹிஹி தெரியாதுடி" என்றான் அசடு வழிந்தபடி.

"அப்போ தூக்கு" என்றாள் இரண்டு கைகளையும் நீட்டியபடி. 'வேற லெவல் மா நீ' என்று நினைத்தது விதி அவளின் செயலில்.

‘இவ வேற நிலைமை புரியாம’ என்று நினைத்த விக்னேஷ் சரியென்று போய் தூக்கினான். அவன் அவளைத் தூக்க அவள் பொறுமையாக ஒவ்வொரு டப்பாவையும் திறந்து பார்க்க பொறுமையை இழந்தவன், 'இன்னுமா இவ எடுக்கறா' என்று நிமிர்ந்து பார்க்க அவன் கண்களுக்கு சில காட்சிகள் விருந்தானது. ஆமாம் அவள் கையைத் தூக்கித் தேட சேலை விலகி அவள் இடை என அனைத்தும் அவன் கண்களுக்குக் குளிர் ஊட்டியது.

"கிடைச்சிருச்சுடா" என்று கௌசி சொல்ல, விக்னேஷிற்கு அவனுக்குக் கிடைத்ததை விட மனமில்லை.

"வேற ஏதாவது வேணும்னா கூட எடுடி... நான் தூக்கிப் பிடிச்சிருக்கேன்" என்று அவன் சொல்ல, அவன் பார்வை சென்ற இடம் புரிந்தது கௌசிக்கு.

"பொறுக்கி ராஸ்கல் இறக்கி விடுடா... பெரிய தாராள பிரபு" என்று ப்ளாஸ்டிக் டப்பாவை வைத்து அவன் தலையில் அடிக்க, விக்னேஷ் அவளை இறக்கிவிட்டான்.

அவனைத் தூக்க வைக்க வேண்டும் என்றுதான் கௌசி நினைத்தாலே தவிர, அவன் ஒருபடி மேலே சென்று அவளைத் திக்க வைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இறக்கிவிட்டவன், "நீதானேடி தூக்க சொன்னே..." என்று சீண்டினான்.

அதற்குள் சுமதி வர, ஏதோ சொல்ல வந்த கௌசி தன் அத்தையைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். சுமதி இருவருக்கும் விபூதியை வைத்துவிட்டு தன் அண்ணன் வரதராஜனிற்கும் விபூதியை சென்று வைத்துவிட்டார்.

இரவு உணவுத் தயாராக அனைவரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தனர். அறைக்குள் சென்ற விக்னேஷ் ஒரு பையை எடுத்துக் கொண்டு வந்து வரதராஜன் முன் வைத்தான்.

எல்லோரும் அவனைப் பார்க்க, "மாமா..." என்று ஆரம்பித்து இன்று குரு அப்பா தேவராஜ் வந்தது என அனைத்தையும் கூறினான். "இந்தாங்க மாமா... இதுல எல்லா நகையும் இருக்கு" என்றான்.

"இதை நீயே வைத்துக்கப்பா" என்றார் வரதராஜன்.

விக்னேஷ், "இல்லை மாமா... எனக்கு வேண்டாம்"

"உன் தொழிலிற்கு வைத்துக் கொள் விக்னேஷ், இதை" என்று வற்புறுத்தினார் வரதராஜன்.

"இல்ல மாமா... இதெல்லாம் எனக்கு வேண்டாம்" விக்னேஷ் பிடிவாதமாக.

"ஏன் விக்னேஷ்? இது குரு வீட்டிற்கு செய்தது என்று உனக்கு..." என்று வரதராஜன் ஆரம்பிக்க விக்னேஷ் கோபமாக உள்ளே புகுந்தான்.

"மாமா அப்படி எல்லாம் இல்லை... எனக்கு உங்ககிட்ட இருந்து கௌசி மட்டும் போதும். இந்த நகை பணம் எதுவும் வேண்டாம் மாமா... அதனாலதான் சென்னையில எல்லாம் வித்துட்டு வரும்போது உங்க பணத்தையும் அம்மா பணத்தையும் உங்க இரண்டுபேரு பேர்ல டெபாசிட் பண்ணேன்" என்றவன்,
"இந்த நகை உங்க உழைப்பு மாமா... உங்களுக்கு என்ன பண்ணனும்ன்னு தோனுதோ அதைச் செய்யுங்க" என்றான்.

"சரிப்பா. அது என் உழைப்புதானே... அதை நான், என் பேரனிற்கோ பேத்திக்கோ செய்து கொள்கிறேன். ஆனால், அதில் நீயும் கௌசியும் தலையிடாதீர்கள்" என்று சொல்ல விக்னேஷ் தலை ஆட்டினான்.

பின் சுமதியும் வரதராஜனும் உறங்கச்செல்ல கௌசியும் விக்னேஷும் மட்டும் ஹாலில் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க கௌசி, 'இது சரிப்பட்டு வராது' என்று எண்ணி முதலில் எழுந்து அறைக்குள் புகுந்தாள்.

அதற்காகவே காத்திருந்த விக்னேஷும் அடுத்து உள்ளே நுழைந்தான். 'ஓஓ... முதல்ல உள்ள போனா உன் கிரீடம் இறங்கீருமா, சீன் சீன் சீன் டா நீ' என்று நினைத்தது விதி.

உள்ளே நுழைந்தவனை கௌசி நைட்டியோடு கால்களை மடக்கி அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வெட்கியவன் கண்களை அவளிடம் திருப்பவே இல்லை. 'அய்யோ... எல்லாம் ஆப்போஸிட்டா நடக்குதே' இது விதி.

பெட்டின் மேல் சென்று உட்கார்ந்தவன் பேசாமல் கையை மடக்கி தலையின் மேல் வைத்துப் படுத்துவிட்டான். கோபம் ஏறிய கௌசி, "டேய் எந்திரிடா" என்று கத்தினாள்.

"ஏன்டி?" என்றான்.

"பெரிய நல்லவனா நீ? இப்படி பண்ணா, அடிச்சிருவேன்டா..." என்று அவள் மிரட்ட, அவனுக்குச் சிரிப்பு வந்தது. பின் எந்தப் பெண் வாயை விட்டுக் கேட்பாள்.

"நல்லவன்தான்டி நான்" என்று இரண்டு கையையும் விரித்துச் சொன்னவன், "அப்புறம் அடிக்காதே டி... நீ அடிச்சா இப்போலாம் சுள்ளுன்னு வலிக்கிது" என்றான் பாவமாக.

"அப்படித்தான் அடிப்பேன்" என்றாள் ஒற்றைப் புருவத்தை தூக்கி.

"அடிச்சிருவியாடி..." என்று சவாலாகக் கேட்டான் விக்னேஷ்.

"ஆமா, கிஸ் அடிப்பேன்" என்ற கௌசி, அவன் கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் அவனைத் தன் அருகில் இழுத்து தன் இதழை அவன் இதழில் பொருத்தினாள்.
முதலில் தடுமாறியவன் பின் அவளுக்கு ஈடு கொடுத்து அவளைத் திண்டாடச் செய்தான். இருவருக்குமே இந்த காதலுடன் பகிர்ந்த முதல் முத்தத்தில் இளமை உணர்வுகள் பேயாட்டம் போட்டுக் கொண்டு எழுந்தது.

பின் இருவரும் மூச்சுக்குத் தவித்துப் பிரிய, "ஏய்... நான் உன்னை ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சேன்டி" என்றான் விக்னேஷ் அவளின் தலையில் தன் தலையை முட்டியபடி.

"அதுவும் உன்னாலதான்... உன் லேப்டாப்பாலதான்" என்று சொல்ல விக்னேஷ், "கேடிடி நீ" என்று அவளை அணைத்தான்.

"கௌசிக்" விக்னேஷ் அணைத்தபடியே.

கௌசி, "சொல்லு"

விக்னேஷ், "ஓகே வா"

என்ன கேட்க வருகிறான் என்பது புரிய, "டேய் நல்லவன் மாதிரி நடிக்காதேனு சொல்லிட்டேன்" என்று அவன் முதுகில் குத்தினாள்.

அவளின் பேச்சில் சிரித்தவனின் கைகள் அடுத்து அத்துமீறியது. பெண்மைக்கே உரிய கூச்சத்தில் அவள் விலகி சிணுங்க, "கௌசிக் வெட்கம்லாம் வருமா?" என்று கேட்டு அவளை தாபத்துடன் அணைத்த விக்னேஷ்வரனின் காதல் வேட்கையில் கௌசிகா முழுவதுமாகக் கரைந்து மூழ்கினாள்.

அவளது உடல் தழும்புகளை ஒவ்வொரு முத்தத்திலும் மொத்தமாக மறைய வைத்தான் அன்று. இருவரின் தாபத்திலும் இருவருமே கரைந்து மூழ்க நீண்ட நாளிற்கு பின் இருவருமே மோன நிலையில் தூக்கத்தைத் தழுவினர்.

அடுத்த நாள் காலை கௌசி எழ, விக்னேஷ் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், "டைம் என்னடா?" எனக் கேட்டாள் தூக்கக் கலக்கத்திலேயே.

"பத்துடி" என்று சொல்ல அடித்துப் பிடித்து எழுந்தாள்.

"அய்யய்யோ எழுப்பி இருக்கலாம்ல... அத்தை கேட்டா என்னன்னு சொல்லுவேன்" என்று சிரிப்புடன் பதைபதைப்பில் கேட்டாள்.

"ஏய், இதெல்லாமாடி கேப்பாங்க..." என்றவன், "கேட்டால்... உங்க மகனை நான் தூங்கவிடலை அத்தை, அப்படின்னு சொல்லு" என்றான் கைகள் இரண்டையும் பின்னால் தலைக்குக் கொடுத்தபடி.

"எது நான், உன்னைத் தூங்க விடலையா?" என்று கேட்டு முறைத்தாள் கௌசிகா.

"ஆமாடி, நல்லவேளை நீ பையனா பொறந்து நான் பொண்ணா பொறக்கலை... எந்த ஜென்மத்தில நான் பண்ண புண்ணியமோ" என்று இரண்டு கைகளையும் கூப்பி மேலே பார்த்தான்.

"ஆமாமா... நீ அப்படியே எதுவும் தெரியாத குழந்தை பாரு" என்றவள் அவனை வெட்கத்துடன் தாக்கினாள்.

பின் சிறிய சீண்டல்களையும் கேலிகளையும் இருவரும் முடிக்க கௌசி "நான் குளிக்கப் போறேன்" என்று போர்வையைத் தன் மேல் சுற்றிக் கொண்டு எழ, "நான் தான் ஃபர்ஸ்ட்" என்று ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அவளுக்கு முன் புகுந்துவிட்டான்.

அவன் வெளியே வர அவனை வேண்டுமென்றே இடித்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். கௌசி சென்றபின் விக்னேஷ் உடையை மாற்றிக் கொண்டு தலையைத் துடைக்க, துண்டு தவறி கீழே விழுந்தது. கீழே குனிந்தவன் அப்போதுதான் கட்டிலின் அடியில் இருந்த கௌசியின் மஞ்சள் நிற ட்ராலியைப் பார்த்தான். இதை ஏன் இங்க வைத்திருக்கிறாள் என்று நினைத்தவன் அதை மேலே வைக்க எண்ணி அதை கட்டிலின் அடியில் இருந்து வெளியே இழுத்தான். சரியாக மூடாமல் வைத்திருந்ததாலோ என்னவோ அந்த டைரி வந்து வெளியில் விழுந்தது.

அதை எடுத்தவன் முதலில் படிக்கத் தயங்கினான். பின் ஏதோ அவனைப் படிக்கச் சொல்ல அதை திறக்க அது நேராக நடுப் பக்கத்தில் சென்று நின்றது. ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க அவன் முகம் இறுகியது. ஐந்து கவிதைகளைத்தான் படித்திருப்பான் அதற்குள் கௌசி வர, அவன் அவளை இடுங்கிய விழிகளுடன் பார்த்தான்.

அவன் கையில் டைரியை பார்த்தவள் அவனிடம் உண்மையைச் சொல்ல வந்தாள் ஆனந்தமாக... ஆனால் அவள் காதில் இடியை இறக்கினான் விக்னேஷ்.

"யாரைடி லவ் பண்ண பர்ஸ்ட்?" என்று அமைதியானக் குரலில் வினவினான்.
அவனது கேள்வியில் உறைந்து நின்றவள், "இல்லைடா..." என்று ஆரம்பிக்க விக்னேஷ் பேசினான்.

"குருவைப் கல்யாணம் பண்ண சொல்லிக் கேட்டப்போ அதுக்குதான் அழுதையா? நான்தான் கேட்டேன்லடி... என்கிட்ட மறச்சிட்ட இல்ல, இப்படி உருகி உருகி காதலிச்சிட்டு எப்படிடி என்கிட்ட மறச்சே... அன்னிக்கு குரு பண்ண டார்ச்சர் எல்லாம் சொன்ன நீ, ஏன் இதை மறைச்சே... சொல்லு" என்று ஆற்றாமையால் கேட்டான்.

"நீ சொல்லி இருந்தா... அவனுக்கே உன்னை நான்..." என்று சொல்லி முடிக்கவில்லை கௌசியின் கைகள் இடியாய் விக்னேஷின் கன்னத்தில் இறங்கியது.

அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றியவள், "என்ன சொன்ன... என்னடா சொன்ன? நான் சொல்லி இருந்தா அவனுக்கே கல்யாணம் பண்ணி வங்சிருப்பேன்... அதானே சொல்ல வந்த... உனக்கு இன்னமும் எதுவும் புரியல இல்ல?" என்று கத்தினாள் கௌசி.

"சரி, டைரியை படிச்சியே முழுசா படிச்சியா?" என்று கோபத்தோடு கத்திக் கேட்டவள் அவன் சட்டையை உதறிவிட்டு, தன் ட்ராலியை எடுத்து கவிழ்த்துக் கொட்டினாள்.

"பாருடா பாரு... இவன்தான் நான் பல வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தவன்" என்றவள் அந்த அறையை விட்டு முழுவதுமாக வெளியெறினாள் கௌசி.
 
  • Love
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-26 (நிறைவு)

கௌசியின் இந்தக் கோபத்தை விக்னேஷ் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அவள் போன பின் கீழே கிடந்ததை எல்லாம் பார்வையிட்ட ஆரம்பித்தான் விக்னேஷ். எல்லாம் சார்ட் பேப்பர்ஸ். அவனை நினைத்து நினைத்து அவள் தன் கையாலேயே ஒவ்வொன்றாக வரைந்தது.

சிறு வயது முதல் இருந்த அனைத்தையும் வரைந்திருந்தாள். ஒரு சுருண்டிருந்த சார்ட் பேப்பரை விரித்த விக்னேஷின் கண்கள் அகல விரிந்தன. அதில் அவனும் கௌசியும் மணக்கோலத்தில் இருப்பது போல ஒரு படம் கௌசி வரைந்து இருந்தாள்.

அவனால் அதில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அந்த படத்தின் கீழே இருந்த கௌசியின் கையெழுத்தின் கீழ் இருந்த தேதியைப் பார்த்தவனின் கண்களுக்கு ஆச்சிரியம் தான். 13.03.2013 என்று இருந்தது.

அவனுடைய 22 பிறந்தநாளன்று அவளுடைய 18வது வயதில் வரைந்திருக்கிறாள். அவனின் பிறந்தநாள் அன்று வரைந்திருந்தவள் அவனிடம் தரவில்லை. பின் இன்னொரு பேப்பரில் ‘ஐ லவ் யூ விக்கா, ஐ மிஸ் யூ விக்கா’ என்று, 'ஸ்ரீராமஜெயம்' போல 'விக்கா, விக்கா' என்று இருந்தது கண்ணீர் கரைகளுடன். எல்லாவற்றையும் பார்த்து அவனுக்கு எல்லையில்லா சந்தோஷம். பின் டைரியில் ஒவ்வொரு கவிதையாய் படிக்க ஆரம்பித்தான்.

படிக்க படிக்க அவன் நெஞ்சில் நிறைந்த நிறைவை அவனுக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நான்சியை அவன் காதலிப்பதாகச் சொன்ன பிறகு அவள் எழுதியது, அடுத்து குரு செய்த கொடுமையில் எழுதியது என எல்லாம் அவனைக் கலங்கச் செய்தது. ஏனோ தன்னையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் ரேகை வந்தது.

தான் பேசத் தெரியாமல் தவறாகப் பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தவன் எல்லாவற்றையும் வைத்து விட்டு கௌசியைத் தேடி வெளியே வந்து, அவள் சமையல் அறையில் இருப்பதை உணர்ந்து அங்கு சென்றான்.

பாத்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தாள் கௌசி. விக்னேஷ் சென்று அவள் தோளைத் தொடப்போக, "தொடாதே... தொட்டீன்னா கைய உடச்சிருவேன்" என்று கோபத்தில் சொல்ல, அவன் வந்த சிரிப்பை அடக்கினான்.

"நான் உன்னை தொடக்கூடாதாடி... பேபி லவ் எல்லாம் பண்ணியிருக்க என்னை... ஆனா, எனக்கு அந்த உரிமை இல்லையா?" என்று கேட்டான்.

"இந்த டயலாக் எல்லாம் அடிச்ச இந்த பாத்திரத்திலேயே அடிச்சிருவேன்" என்று கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை நீட்டி எச்சரித்தாள்.

"பாத்திரத்துல அடிக்க வேண்டாம்டி... நேத்து அடிப்பன்னு சொல்லி அடிச்சீல அதையே பண்ணு" என்றான் அவளை நோக்கி குனிந்து.

கோபம் வந்தவள் கையில் இருந்த சோப்பு நுரையை முகத்தில் அப்பிவிட்டாள். ஆனால், அவனுக்கு கோபமே வரவில்லை. மாறாக சிரித்தவன் அவள் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை வேண்டுமென்றே இடுப்பில் விரல் பட்டவாறு எடுத்து முகத்தைத் துடைத்தான். அவன் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாலும் அவள் வெளியே காட்டவில்லை.

"ஸாரிடி" விக்னேஷ் சொல்ல, பதிலே இல்லை கௌசியிடம். "ப்ளீஸ்டி" என்று அருகில் வந்தவனைத் தள்ளி விட்டாள்.

அதற்குள் சுமதி வர அன்னையின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் விக்னேஷ் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான். வந்தவன் பேசாமல் உட்கார சமையல் அறையில் இருந்து வெளிய வந்த கௌசி, 'தங்' என்று டீயை டேபிளில் வைத்து விட்டுப் போனாள்.

மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு இருவரும் ஸ்டுடியோவிற்கு கிளம்பினர். இருவரும் உள்ளே நுழையும்போதே வெளியே வந்த விக்ரம், 'ஆடி அசஞ்சு வராங்க பாரு இரண்டும்...' என்று நினைத்தவன், "வாங்க... எங்க ஸ்டுடியோவிற்கு என்ன விஷயமா வந்திருக்கீங்க?" என்று நக்கலடிக்க, "தள்ளு" என்று கௌசி சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

"என்னடா, உன் பொண்டாட்டி, அடுப்பில் இருந்து இறக்கி வச்ச மாதிரி போறா" என்று வினவியவன், விக்னேஷின் முகத்தில் பல்ப் எரிவதை கவனித்தான்.

"என்னடா ஒரே ஒளி வட்டமா இருக்கு" என்று விக்ரம் சிரித்தபடியே வினவ அவனைக் கட்டிப்பிடித்தான் விக்னேஷ்.

"டேய்! டேய்! என்னடா பண்ற... ரோட்ல போறவன் எல்லாம் பாக்கறான் பாரு" என்று அவனை விலக்கினான்.

"ஒரு மார்க்கமாதான் திரியறடா நீ! உள்ள போ... நான் வெளில போயிட்டு வரேன்" என்று விக்ரம் கிளம்பி விட்டான்.

உள்ளே நுழைந்தவனை அங்கே வேலை செய்யும் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர். தன் முதலாளியின் முகத்தில் உள்ள ஒளி வட்டத்தைப் பார்த்து.

தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவன் அறையின் முன்னே இருந்த கேபினில் கௌசி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவன் அவள் முன்சென்று நின்றான். அவன் நின்றதை உணர்ந்தவள் நிமிர, அவளைத் தான் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சிலர் இவர்களை கவனிக்க, "எல்லோரும் பார்க்கறாங்க" என்றாள் பல்லைக் கடித்தபடி. விக்னேஷ் திரும்ப அனைவரும் பயத்தில் தலையைக் குனிந்து அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

"மிஸஸ்கௌசிகா, கொஞ்சம் உள்ள வர முடியுமா?" என்றான் விக்னேஷ். அவள் முறைக்க, "வேலை விஷயமாகத்தான்" என்றான் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு. அவன் முன் நடக்க பின்னே சென்றவள் பேசாமல் சென்று அவனிற்கு எதிரில் அமர்ந்தாள்.

"நல்லா இந்த தொழிலைக் கத்துக்கங்க கௌசிகா... நான் இந்தத் தொழிலை கொஞ்சநாளில் என் மனைவியின் கையில் ஒப்படைத்து விட்டு இயற்கை விவசாயத்தில் முழுதாக இறங்கப் போகிறேன்" என்றான். கௌசிக்கு அவன் சொன்னதில் திகைத்தாலும் வெளியே காட்டவில்லை.

ஏதோ கௌசி சொல்ல வர, "இரு நான் முடித்துவிடுகிறேன். என்ன கேட்க வரப்போறேன்னு தெரியும். இது இன்னிக்கு எடுத்த முடிவு இல்ல, எப்பவோ எடுத்தது. டைம் வரும்போது சொல்லலாம்னு விட்டுட்டேன்... பசிங்கற கொடுமை இன்னும் நம்ம நாட்டுல போகாமதான் இருக்கு, என்னால நாடு முழுவதும் தீர்க்க முடியலனாலும் நம்ம ஊருக்குள்ள பண்ண முடியும், அதான் இதைப் பண்ணப் போறேன்" என்றான்.

"என் கூட தைரியமா... ஒரு துணையா என் பொண்டாட்டி இருந்தா, நான் இந்த ஸ்டூடியோவை அவள் கையில் விட்டுவிட்டு அதைப் பார்ப்பேன்" என்றான் விக்னேஷ்.

"ம்ம்" என்று மட்டுமே பதில் வந்தது அவளிடம் இருந்து. வேறு ஏதாவது கௌசி பேசுவாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல எத்தனித்தவளின் கரத்தைப் பற்றியது விக்னேஷின் கரங்கள். திரும்பி அவனை முறைத்தவள், "கையை விடுடா" என்றாள். "ஸாரிடி" என்றவனை வெட்டும்பார்வை அவள் பார்க்க, அவன் சலனமே இல்லாமல் நின்றான்.

"நான்தான் ஏமாத்துனவ, எல்லார் கிட்டையும் மறச்சவ, நீங்க ஏன் சார் ஸாரி கேக்கறீங்க? உங்க மேல எப்போதுமே தப்பு இருந்தது இல்லையே… அதனால்தானே கம்பத்திலும் என்னைத் திட்டுனீங்க... அப்புறம் இன்னிக்கு காலைலயும் அப்படி பேசுனீங்க" என்று கேட்டவள் அவன் கையை உதறிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

விக்னேஷ்தான் அப்படியே நின்று விட்டான். ஒவ்வொரு முறையும் அவளின் நிலை அறியாமல் தான் பேசிய பேச்சில் அவள் எவ்வளவு காயப்பட்டிருப்பாள் என்று உணர்ந்தவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.

மாலை வீடு வரும் வரையும் இருவரும் பேசவில்லை. வந்து சேர்ந்தும் பேசவில்லை. இரவு சாப்பிடும் போது ஏதோ ஃபோன் வர எழுந்து சென்று எடுத்தக் கௌசி பத்து நிமிடம் கழித்தே வந்தாள்.

வந்தவளிடம், "என்ன கௌசி... யாரு?" என்று கேட்டார் சுமதி.

"கவிதாதான் அத்தை" என்றவள், "அடுத்த வாரம் அவள் கல்யாணமாம்... அதுக்கு கூப்பிடத்தான்" என்றாள் தோசையை பிய்த்து வாயில் போட்டபடியே.

சுமதி, "இன்னும் ஒரு மாசம் இருக்குன்னு சொன்னீல்ல?"

"அது ஏதோ சுரேஷ் பாட்டிக்கு உடம்பு சரி இல்லையாம்... அதான் சீக்கிரமே பண்றாங்களாம் அத்தை" என்றவள், "நாங்க அடுத்த வாரம் கம்பம் போயிட்டு வந்திடறோம் அத்தை" என்றாள் பொதுவாக அனைவருக்கும்.

"உன் அத்தையிடம் ஏன்மா சொல்ற? விக்னேஷ்கிட்ட சொல்லு" என்று வரதராஜன் சரியான நேரத்தில் கௌசியின் காலை தெரியாமல் வாரினார்.

"அவனும்தான் என் கூட வருவான்" என்று அவனைக் கேட்காமலே முடிவெடுத்துச் சொன்னவள், சாப்பிட்டு முடித்த தட்டோடு எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.

படுக்கை அறைக்குள் நுழைந்தவள் விக்னேஷ் இல்லாததைக் கண்டு தேடினாள். அதற்குள் அவன் பாத்ரூமில் இருந்து வர, ‘அதானே பார்த்தேன் நீ எங்க போகப் போற’ என்று மனதில் நினைத்தவள் அமைதியாகச் சென்று படுத்தாள்.

அவள் அருகில் வந்து இன்னொரு பக்கம் விக்னேஷ் படுக்க இருவருக்குமே நேற்றைய இரவு ஞாபகம் வந்து இம்சித்தது. கௌசி அதை எளிதில் கட்டி வைக்க விக்னேஷால்தான் முடியவில்லை.

லேசாக நகர்ந்த அவன் அருகில் வந்து திரும்பி முதுகைக் காட்டிப் படுத்திருந்த கௌசி அருகில் படுத்தான். அவனின் செயலில் கண்களை மூடிக் கொண்டிருந்தவள் விழித்தாள். எழுந்து அவனைப் பார்த்து உட்கார்ந்தவள், "தள்ளி படுடா" என்றாள். இல்லை கத்தினாள்.

"முடியாது போடி" என்றவன் கண்ணை மூடிக் கொண்டான்.

அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம் கௌசி அதைச் செய்தாள். ஒரு உதை அவள் உதைக்க, அவன் சுதாரிப்பதற்குள் இரண்டாவது உதை உதைத்தாள். அவள் உதைத்ததில் கீழே சென்று விழுந்தவன் தன் இடுப்பைப் பிடுத்துக் கொண்டு எழுந்தான்.

"ஏய் என்னடி, உதைக்கற... ஏதாவது படக்கூடாத எடத்துல பட்டா என்ன ஆகறது?" என்றான் இடுப்பைத் தேய்த்தபடியே.

"இனி பக்கத்தில வந்த படக்கூடாத எடத்துலதான் கண்டிப்பா உதைப்பேன்" என்று படுத்துவிட்டாள்.

"ராட்சசி!" என்று முணுமுணுத்தவன் பெட்டின் நுனியில் படுத்துவிட்டான். அடுத்த வந்த ஏழு நாட்களில் விக்னேஷின் லட்சம் மன்னிப்பும் ஆயிரம் கெஞ்சல்களும் கௌசியிடம் செல்லுபடி ஆகவில்லை. அவள் காது கூடக் கொடுக்கவில்லை அவன் வார்த்தைகளுக்கு.

கவிதா, சுரேஷின் கல்யாணநாள் நெருங்க இருவரும் கம்பம் கிளம்பினர். இந்த ஒருவாரத்தில் விக்னேஷ் சிகரெட்டை விட்டிருந்தான். கௌசியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவனிடம் வாய்விட்டுக் கேட்கவில்லை. செல்லும் வழியில் அவனைத் திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவள், 'ஏன்டா... அப்படிப் பேசுனே?' என்று மனதிற்குள் கேட்டாள்.

பின் கம்பம் வர நேராக சங்கரலிங்கம் அய்யா வீட்டிற்குச் சென்றனர். இருவரையும் பார்த்து இருவருக்கும் கல்யாணம் ஆன செய்தியை அறிந்தவர், இருவரையும் ஆசிர்வதித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரபு தன் தந்தை சொன்ன செய்தியைக் கேட்டு இருவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான். உண்மையாகவே அவனுக்குப் பொறாமையோ அல்லது வேதனையோ எதுவுமே இல்லை. மாறாக கௌசியின் வாழ்க்கை சீர் ஆனதை நினைத்து அவனுக்கு சந்தோஷமே.

"எங்க தங்கப் போறீங்க?" பிரபு இருவரையும் பார்த்து கேட்க, இருவரும் யோசிக்க, "பேசாமல் நீங்களும் கவிதாவும் இருந்த வீட்டிலேயே தங்கிக்கோங்க" என்ற பிரபு, அவர்களிடம் பதிலை எதிர்பாராது சென்று சாவியை எடுத்து வந்து கௌசியிடம் தந்தான்.

சாவியை வாங்கிவிட்டு விக்னேஷ் செல்ல, கௌசி பிரபுவிடம் திரும்பினாள்."தேங்க்ஸ் பிரபு... நீங்களும் சீக்கிரம் உங்க கல்யாண செய்தியைச் சொல்லுங்க" என்று சொல்ல பிரபு, "கண்டிப்பா சொல்றேன் கௌசி" என்று இருவரையும் மனம் நோகாமல் அனுப்பி வைத்தான் பிரபு.

வீட்டை அடைந்து கௌசி உள்ளே செல்ல, அவள் முதல் சென்ற இடம் வீட்டின் பின்பக்கம் தான். அது அவளுக்குப் பிடித்த இடம் கூட.

சிறிது நேரம் கழித்து உள்ளே வர, விக்னேஷ் படுக்கை அறையில் கௌசியின் பெட்டில் தூங்கிக் கொண்டு இருந்தான். காரை ஓட்டி வந்த அலுப்பு என்று நினைத்தவள் அவனை எழுப்ப மனமில்லாமல் அவளும் சிறிதுநேரம் தூங்கலாம் என்று நினைத்து அலாரம் வைத்துவிட்டுக் கவிதா பெட்டில் படுத்தாள்.
இருவருமே மாலை ஐந்துமணிக்கே எழுந்தனர்.

"தண்ணி காய வைக்கிறேன், சுடு தண்ணீல குளி! இல்லைனா சளி புடிச்சிக்கும்" என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றாள். கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து அவள் பேசியது அவனிடம் இப்போதுதான்.

இருவரும் கிளம்பி ரிசப்ஷனிற்கு செல்ல அங்கே இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு மேலே சென்ற கௌசியும் விக்னேஷும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, கவிதா கௌசியின் மாற்றத்தையும் முகப் பொலிவையும் கண்டு அவளைக் கட்டி அணைத்தாள்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு கௌசி..." என்றவள், "நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு கிளம்பிறாதே... என்கூட கொஞ்சநேரம் இருந்துட்டு போ" என்று சொன்னாள்.

ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு கீழே வர பழைய ஸ்கூல் ஆசிரியர்கள் சிலர் வர, கௌசி அவர்களுடன் பேசிக் கொண்டு நின்றாள். விக்னேஷையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பதினைந்து நிமிடம் அவர்களுடன் பேசிவிட்டுத் திரும்ப விக்னேஷை காணாமல் தேடினாள். அவனும் பிரபுவும் பேசிக்கொண்டு நிற்க அவர்கள் அருகில் சென்றவள், "சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா... நான் உன்னை தேடிட்டு இருக்கேன்" என்று விக்னேஷிடம் கேட்க, "இல்லை பார்த்தோம்... அப்படியே பேசிட்டு இருந்தோம்" என்றான் விக்னேஷ்.

பின் பிரபு, விக்னேஷ், கௌசி மூவரும் ஒன்றாகவே சாப்பிட சென்று சாப்பிட்டு முடித்து அவரவர் வீட்டிற்குத் திரும்பினர். வந்த இருவருக்கும் தூக்கமே இல்லை வீட்டில். நேரம் தாழ்ந்தே கண்களை அசந்தவர்கள் காலை நான்கு மணிக்கே விழித்து விட்டனர்.

ஐந்து மணிக்கு கோயிலை அடைந்தவர்கள் சரியாக முகூர்த்திற்கு முன் அங்கு இருந்தனர். அன்று விக்னேஷ் முதல்முதலாக எடுத்துத் தந்த ஆரஞ்ச் மஞ்சள்நிறப் புடவையைக் கட்டி இருந்தாள் கௌசிகா. அந்த அதிகாலை வேளையில் ஒரு சிலர் தூங்கி வழிய ஒரு சிலர் பரபரப்பாக இருக்க சுரேஷ், கவிதா முகத்தில் மட்டும் அப்படி ஒரு பெருமிதம்.

காதலித்தவர்களையே கை பிடிக்கப் போவதில் அப்படி ஒரு பூரிப்பு. ஒரு பெருமூச்சுடன் கௌசி திரும்ப, விக்னேஷின் பார்வை தன்மேல் இருப்பதை கவனித்தாள் கௌசி. ஏனோ அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் திரும்பிக் கொண்டாள்.

முகூர்த்தம் முடிய கௌசியைத் தன்னுடனே வைத்துக் கொண்டாள் கவிதா. விக்னேஷும் பிரபுவிடனும் சுரேஷுடனும் இருந்தான். மதியம் கிளம்ப இருந்தவர்களை வற்புறுத்தி இரவு வரை தங்க வைத்தனர். கவிதாவை இரவிற்கு தயார் செய்த கௌசி ஓரக்கண்ணால் கவிதாவைப் பார்க்க, அவளோ வெட்கத்தை கண்களில் தேக்கி முகத்தில் அடக்கியபடி உட்கார்ந்திருந்தாள்.

"ம்கூம்... நான் ஒருத்தி இங்கதான் இருக்கேன்... இப்பவே வேற ஒரு லோகத்துக்கு போயிட்டபோல" என்று கௌசி கலாய்க்க,

"ச்சு! போ கௌசி" என்றாள் கவிதா முகம் சிவக்க.

"ம்ம் ம்ம் நானும் காலைல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன் இரண்டு பேரும் கண்ல பேசறத" என்று விடாமல் கவிதாவை கிண்டல் செய்ய,

"நீயும்தான் எவ்ளோ மாறிட்ட... முகம் ப்ரைட் ஆகி, உடம்பு லேசா போட்டு... நல்ல கவனிப்பு போல" என்று ஆரம்பிக்க, கௌசிக்கும் முகம் சிவந்து விட்டது. பின் கவிதாவை சுரேஷ் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு விக்னேஷுடன் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள்.

"நாளைக்கு மார்னிங் கிளம்பலாம் கௌசி" என்று விக்னேஷ் சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி.

வீட்டிற்குள் நுழைய விக்னேஷ் செல்போனை எடுத்துக் கொண்டு விக்ரமிடம் பேச சென்றான். அன்று முழுவதும் இருவரின் பார்வையும் இருவரின் மேல்தான் இருந்தது.

கௌசி, விக்னேஷ் முதல்முறையாக மதி, ஜீவா நிச்சயதார்த்தம் அடுத்து எடுத்து தந்த ஆரஞ்ச் மஞ்சள் நிற டிசைனர் சில்க் சேரியை கட்டி இருந்தாள். விக்னேஷும் அன்று பட்டு வேஷ்டியும் மஞ்சள் நிற சட்டையை அணிந்திருந்தான்.

அவன் விக்ரமிடம் பேசிவிட்டு வர, கௌசி வீட்டின் பின் இருந்த தண்ணீர் தொட்டியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அங்கு சென்று அமர்ந்தான். கௌசியோ அவன் வந்தது உணர்ந்தும் திராட்சைத் தோட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள். அவனும் ஒன்றும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"ஏன் விக்கா? உனக்கு என்னோட லவ் புரியவே இல்லையா? எப்படிடா நாம ஈருடல் ஓருயிராக வாழந்த அப்புறம் உன்னால் என்னைப் பார்த்து அப்படி கேட்க முடிந்தது?" என்று வந்த அழுகையை அடக்கியபடிக் கேட்டாள் கௌசி.

அவளின் திடீர் கேள்வியில் தடுமாறியவன் பின் நிதானித்து, "நீ என்கிட்ட சொல்லவே இல்லையே கௌசி, என்னை லவ் பண்றன்னு" என்றவன் அவளின் அடுத்த கேள்விக்கு, "ஸாரி" கேட்டான்.

கௌசிகா, "சொல்லவே இல்லைன்னு சொல்ற... ஆனா, அந்த குரு சொன்னான், உன் மூஞ்சிய பார்த்தே தெரிஞ்சது, நீ உன் அத்தை மகனை லவ் பண்றன்னு... நான்சிக்கும் தெரியாதுனு நினைக்கிறயா? ஆனா, உன்னால கண்டு பிடிக்க முடியலைல?

நான் சொல்லலதான்... ஆனால், எனக்கு இருக்க மாதிரிதான் உனக்கும் இருக்கும்ன்னு நினைச்சேன்டா... நீ நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசணும்னு கூப்பிட்டேல... அப்போ கூட நான், நீ என்கிட்ட லவ்வ சொல்லக் கூப்பிடறயோன்னுதான் நினைச்சேன்டா... உனக்கு அப்படி தோனவே இல்லேயாடா?" என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

அதுவரை உள்ளே வைத்திருந்த அனைத்தையும் கொட்டினான் விக்னேஷ்.

"நான், உன்ன எப்போ லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன் தெரியுமா கௌசி... நான் கனடா ப்ளைட் ஏறும்போது...

லவ் பண்ண ஆரம்பித்தேன்னு சொல்றதவிட, அப்போதான்டி உணர்ந்தேன். அந்த நான்சியை திட்டிட்டு வந்தனே தவிர எனக்கு அதுல துளியும் வருத்தம் இல்லை. மாறாக உன் நினைப்புதான்டி... ஒத்துக்கறேன் நான் அவளை லவ் பண்ணேன்னு நினைச்சு அவ அழகுல மயங்கி இருந்தேன்தான். அதுவும் தப்புன்னு அந்த ஆண்டவன் புரிய வச்சான்" என்ற விக்னேஷ் தொட்டியில் இருந்து இறங்க, கௌசியும் இறங்கினாள்.

"உன் கூடவே சின்ன வயசுல இருந்து இருந்தாலோ என்னவோ எனக்குப் புரியலடி... ஆனா, உன்ன விட்டு வந்த அப்புறம்தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுதுடி. அப்புறம் நீ கஷ்டத்துல இருந்தப்ப என்னால வர முடியல, மாமா, நீ எல்லோரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க...

நான், உனக்கு ஃபோன் மெசேஜ் பண்ணேன் நீ எதுக்கும் ஆன்சர் பண்ணல... நான் வந்து உன்னைக் கல்யாணம் பண்ண இருந்தப்போதான் நீயும் போயிட்ட, அப்பாவும் போயிட்டாரு... என்னால எதையும் தாங்கிக்கவே முடியல டி"என்றவனின் குரல் கரகரத்தது.

கௌசிக்கு நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அவனுக்கு எப்போதில் இருந்து காதல் என்று. அவன் குரலில் இருந்த வேதனையைப் புரிந்து கொண்ட கௌசி, அவனின் கையைப் பிடித்து அவன் தோளில் சாய்ந்தாள்.

"ஸாரிடா... ஸாரி! நீ நான்சியை லவ் பண்ணிட்டு இருப்பே... அதனால எதுக்கு நடுவுல நான் வரணும்ன்னு நினைச்சுதான் நான் கிளம்பிட்டேன். ஆனா, இங்க வந்தும் என்னால உன்ன மறக்க முடியலடா" என்றவளின் குரலும் கரகரத்தது.

"என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா நீதான்டா விக்கா ஃபுல்லா இருக்கே... நான் பிறந்து ஃபர்ஸ்ட் பேர் சொன்னது உன் பேர்தான். நான் பெரிய பொண்ணு ஆகி ஃபர்ஸ்ட் சொன்னதும் உன்கிட்டதான். என் லவ்வ தவிர எல்லாம் உன்கிட்டதான் சொன்னேன்டா" என்றாள் கௌசி ஒருவித தவிப்புடன்.

"எனக்குப் புரியலடி... நீ, ஜீயைக் கூட ஜீ மாமான்னு சொல்லுவ... என்னை அப்படி எல்லாம் சொன்னதே இல்ல. கல்யாணம் ஆன அப்புறமாவது சொல்லி இருக்கலாம்ல என்னை லவ் பண்ணதை" என்றான் ஆதங்கமாக.

"எனக்கு சொல்லவே தோனலைடா, நீ என் கூடையே இருப்ப அப்படின்னு சின்ன வயசுல இருந்து சொல்லவே தோனலை" என்றாள் கௌசி.

"நான் கம்பத்தில் இருந்தது உனக்கு எப்படித் தெரியும்?" துடித்த உதடுடன் கேட்டாள்.

"அப்பா கடைசியா ஐசியூவில் இருந்து என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமாடி? கௌசி கம்பத்தில் இருக்கா... கௌசி பத்திரம் விக்னேஷ் என்றுதான் சொன்னார். அதுக்கு அப்புறம் விசாரித்து நீ பத்திரமாக இருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். அவ்வப்போது கண்காணித்து கொண்டுதான் இருந்தேன். ஆனால், அவருக்கு எப்படித் தெரியும் என்று எல்லாம் எனக்குத் தெரியவில்லை" என்றவனின் கண்களில் தந்தை நினைவில் கண்ணீர் வர, அவனை அணைத்துக் கொண்டாள் கௌசி.

"ப்ளீஸ்டா... ஃபீல் பண்ணாதே, ப்ளீஸ்! உனக்கு நான் இருக்கேன் விக்கா... எப்போதுமே, உன் கூடயே" என்றவள், அவனின் கண்ணீர் பொறுக்காமல் கதற ஆரம்பிக்க அவளின் அழுகையை உணர்ந்தவன்,

அவளின் கன்னம் பற்றி, "அழாதேடி... ஆனா, ஒன்னு மட்டும் புரியதுடி... நான் உன்கூட, நீ என்கூட இருக்கிற வரைக்கும் நம்ம நாமாகத் தான் இருப்போம். நடுவில நடந்த எல்லாம் சூழ்நிலையால நடந்ததே தவிர நாம அதுக்கு காரணம் இல்லை. சூழ்நிலை நம்ம லவ்வ இன்னும் ஸ்ட்ராங் ஆக்கிருச்சுடி" என்றவன் அவளை அணைத்து ஆறுதல்படுத்தினான்.

மனம்விட்டுப் பேசிய இருவருக்கும் மனம் லேசாகியது. மனபாரம், குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவடைந்தனர்.

அவனின் அணைப்பில் இருந்தவள், "ஐ லவ் யூ டா விக்கா" என்றாள்.

விக்னேஷ், "இன்னொரு தடவை"

"ஐ லவ் யூ டா விக்கா" கௌசி சிரித்தபடியே.

"இன்னும் ஒரு தடவை" விக்னேஷ் அவளை இறுக்கியபடி.

"ஐ லவ் யூ டா விக்கா மாமா" என்று கௌசி அவனை தன்னுடன் இறுக்கி காதலை சத்தமாகச் சொன்னாள்.

"நீ ஏன்டா என்னை சின்ன வயசுல தூக்கியதே இல்லை... ஜீ தான் தூக்குவானாம், உன்னைக் கேட்டா நீ வேணாம்னு சொல்லிருவயாம்... ஏன்?" என்று கேட்டாள்.

"அது எங்காவது உன்னை கீழே விட்டிடுவேன்னு பயம்டி... ஆனா, உன்ன பார்த்துட்டேதான் இருப்பேன்" என்றான் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டபடி. ஏனோ இந்தக் காமம் இல்லா அணைப்பு இருவரையும் அப்படியே அணைப்பில் இருக்க வைத்தது.

எல்லாம் கொஞ்சநேரம் தான். கௌசியைக் கைகளில் ஏந்தியவன், "சின்ன வயசுல தூக்காததுக்கு இப்போ சேத்தி தூக்கறேன்" என்றவன் அவளை உள்ளே கொண்டு சென்றான்.

படுக்கை அறைக்குள் நுழைந்தவுடன், "என்ன இறக்கி விடுடா" என்று பொய்க்கோபம் காட்டினாள் கௌசி.

"முடியாது" என்று அவன் அவளை தன்னுடன் இறுக்க, தோள்பட்டையில் கடிக்கச் சென்றவளை, "ஐயோ இருடி தாயே" என்று இறக்கி விட்டான்.

"நான் மட்டும் உன்ன ப்ரபோஸ் பண்ணா போதுமா? ப்ரபோஸ் மீ" என்று கௌசி சொல்ல நமது ஹீரோவோ, 'ஹே'வென விழித்தான்.

"அப்ப பண்ண மாட்டல... சரி குட்நைட்" என்று கௌசி திரும்ப, "ஐயயோ... இரு இரு" என்று கையைப் பிடித்தவன், ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பின் ஆரம்பித்தான்.

"கௌசி..." என்று அவளது ஒரு கையை தன் இரு கைகளுக்குள் வைத்தவன், "என் வாழ்க்கைல எல்லார் மேலயும் ஒரு ஃபீலிங் இருக்குடி... அம்மாகிட்ட பாசம், அப்பா மேல மரியாதை, ஜீவா, மதி மேல ப்ரண்ட்ஷிப், வியா பாப்பா கிட்ட அக்கறை, அஃபக்ஷன்... ஆனா, இது மொத்தமா சேத்தி உன் மேல தான் இருக்கு... மொத்தமும் எனக்கு நீதான்" என்று விக்னேஷ் சொல்ல சொல்ல கௌசியின் முகம் அவனது சொற்களில் தன்னை மறந்து நிற்க வைத்தது.

"உன் வாழ்க்கையைத் திரும்பிப் பாத்தா நான் இருக்கனு சொன்ன... ஆனா, என் வாழ்க்கையாவே நீதான்டி இருக்க... ஐ லவ் யூ கௌசி, ஐ லவ் யூ பாட்லி!" என்று அவளை இறுக அணைத்தவன் அவளது இதழ் நோக்கிக் குனிந்து தனது காதலின் அழுத்தத்தையும் ஆழத்தையும் முத்த மொழியால் மீண்டும் சொன்னான்.
அடுத்து அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் மேல் படர, அன்றைய இரவில் தீராத காதலையும் திகட்டாத காமத்தையும் இருவரும் கற்று அறிந்தனர். அவனது ஒவ்வொரு செயலிலும் கௌசியின் ஊனும் உயிரும் உருகி, அவளது காதலிலும் உணர்வுகளிலும் விக்னேஷின் ஊனும் உயிரும் பூரித்து அன்றைய இரவில் இருவரும் இருவரிடமும் சரணடைந்தனர். மனம் நிறைந்த இருவரும் விட்டத்தைப் பார்த்து படுத்திருக்க திடீரென விக்னேஷின் உச்சிமுடியைப் பிடித்தாள் கௌசி.

"இனிமேல் என்கிட்ட தேவையில்லாம சண்டை போட்ட... அவ்வளவு தான் நீ!" என்று உச்சியில் வைத்த கையை எடுக்காமல் சுற்றினாள்.

"சரி டி, சரி... நீ சொல்றதையே கேக்கறேன்" என்றவன் அவள் இதழில் கவிதை பாட ஆரம்பித்து, அவளைத் தான் பேசிக் கொண்டிருந்ததை மறக்கடித்து அந்த இரவை விடியா இரவாக ஆக்கினான்.

இரண்டு மாதம் கடந்தது...

அன்று ஞாயிற்றுக்கிழமை. மகாலிங்கம் அய்யா வீட்டிற்குச் சென்று வந்த விக்னேஷ் வீட்டில் சத்தமே இல்லாததை உணர்ந்தான். தன் அன்னையும் மாமாவும் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் டிவியைப் போட்டு உட்கார்ந்தான்.

அப்போது தான் கௌசி தங்கள் அறையில் இருந்து வெளியே வந்து அமைதியாக உட்கார்ந்தாள். அவனிடம் எதுவுமே பேசவில்லை.

‘என்ன இவ சைலன்டா இருக்கா?’ என்று நினைத்தவன், "ஏய் என்ன ஆச்சுடி?" என்று வினவினான்.

அப்போதுதான் அவனிற்கு அவள் வயதிற்கு வந்த தினம் ஞாபகம் வந்தது. இதே மாதிரி அவள் வந்து உட்கார்ந்தது என எல்லாம்.

"கௌசி..." என்று கூப்பிட்ட அவனின் குரலில் அவ்வளவு சந்தோஷம், பெருமை.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், "வீ ஆர் ப்ரக்னென்ட் ரா" என்று கௌசி பல்லைக் காட்டி சொல்ல, அவனால் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.
அவளைத் தூக்கிச் சுற்றியவன் பின் இறக்கிவிட்டு அவளின் நெற்றியில் முத்தத்தைத் தர, கௌசிக்கு டபுள் மகிழ்ச்சி ஆகிவிட்டது.

அனைவருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க அனைவருக்கும் இருவரின் சந்தோஷமும் தொற்றிக் கொண்டது. வீட்டிற்கு வந்த வியா குட்டியோ, "அம்மாகிட்ட இருந்து ஒரு பாப்பா... சித்திகிட்ட இருந்து ஒரு பாப்பா" என்று துள்ள அனைவருக்கும் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.

அன்று இரவு தங்கள் அறையில் இருந்த கௌசி விக்னேஷின் நெஞ்சில் சாய்ந்தபடி கிடந்தாள். "விக்கா" என்ற அழைப்பில், "சொல்லுடி" என்றான் விக்னேஷ்.

கௌசி, "ஹாப்பியா இருக்குடா"

"நானும்டி" என்றவன் அவளை விட்டு எழுந்து கப்போர்ட்டில் இருந்த சின்ன கிஃப்டை எடுத்து வந்து, அவள் நெற்றியில் ஒரு முத்தத்தைத் தந்து கையில் தந்தான்.

கௌசி கிஃப்டை பிரிக்க அதில் தங்கத்தில் ஒரு பெரிய ப்ரேஸ்லட், சின்ன ப்ரேஸ்லட் இருந்தது.

"இது என்னடா சின்னது?" என்று கேட்க,

"இதை நீ இப்பப் போடக்கூடாது. பாப்பா வந்த அப்புறம் இரண்டுபேரும் போட்டுக்கங்க ஒரே மாதிரி" என்று சொல்ல, கௌசி எழுந்துசென்று ஒரு கவரை எடுத்து வந்து தந்தாள்.

அதில் பெரியகாப்பு, சிறியகாப்பு என்று இருந்தது, "பையன் வந்தா... பெரிய காப்பு... சின்ன காப்பு போட்டுக்கோங்க" என்று சிரித்தாள்.

"லவ் யூ டா விக்கா" என்றாள் கௌசிகா, அவனை அணைத்தபடி.

"லவ் யூ டூ டி" என்று தன்னை அணைத்தவளை காதலோடும் தன் மகவை சுமக்கும் அக்கறையோடும் அணைத்தான் விக்னேஷ்வரன்.

இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியே.
இவர்கள் காதல் கனவு என்றும் மறையாது.

***முற்றும்***
 
  • Love
Reactions: Malar